நோ சொன்னா நோ தான்.. எல்லோரும் எதிர்பார்த்தது நடந்துடுச்சு.. இதுக்கு பேரு என்ன தெரியுமா பிக் பாஸ்?

சென்னை: முகென், அபி இடையே பிரச்சினை ஏற்படுத்திவிட்டதாக பிக் பாஸ் ரசிகர்கள் வனிதா மீது கோபமடைந்துள்ளனர்.

பொதுவாக தனியாக இருக்கும் தம்பதியினர் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கை சுமூகமாக நடத்திக்கொண்டிருப்பர். திடீரென ஊரில் இருந்து வரும் சொந்தக்காரர்கள், இருவருக்குள்ளும் சண்டை மூட்டிவிட்டுவிடுவர். இது வெட்டுகுத்து வரை போய் முடியும்.

அப்படி ஒரு நிலைமை தான் பிக் பாஸ் வீட்டிலும் ஏற்பட்டுள்ளது. லக்சுரி டாஸ்கில் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வனிதா நுழைந்ததுமே பரபரப்பு தொற்றிக்கொண்டுவிட்டது. நேற்றைய எபிசோடில் அவர், ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் கூப்பிட்டு லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார்.

சிண்டுமுடியும் வனிதா

சிண்டுமுடியும் வனிதா

இன்றைய முதல் புரொமோவில் முகெனை பற்றி அபியிடம் சிண்டு முடிந்து விடுகிறார். அடுத்த புரொமோவில் பார்த்தால், அபியை சேரை தூக்கி அடிக்க பாய்கிறார் முகென். இதன் மூலம் வந்த வேலையை கச்சிதமாக முடித்துவிட்டார் வனிதா என்பது புரிகிறது.

வீழ்ந்தாயடா கர்ணா

வனிதாவின் இந்த செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரசிகர்கள் தங்கள் பதிவிட்டு வருகின்றனர். "செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா.. வஞ்சகி அபிராமிடா", என கர்ணன் பட பாடலை வைத்து நக்கல் அடித்துள்ளார் இவர். உண்மையில் முகெனின் நிலைமைக்கு இந்த கமெண்ட் பெரிதும் பொருந்தி போகிறது.

முகென் மீது தவறில்லை

"இந்த விஷயத்தில் முகென் மீது எந்த தவறும் இல்லை. அவன் எப்போதாவது அபியை காதலிப்பதாக சொன்னானா. அபி தான் ஆள் கிடைக்காம ஒவ்வொருத்தரையா முயற்சி செய்துகிட்டு இருக்கா. இப்போ முகெனின் வாழ்க்கையை காலி பண்ண வனிதாவும், அபியும் முயற்சி செய்றாங்க", என கமெண்ட் செய்துள்ளார் இவர்.

முகெனை காலி பண்ணியாச்சி

"சந்தோஷம் முகெனையும் காலி பண்ணியாச்சா. அன்னைக்கே கவின் சொன்னான், வாழும் உதாரணம் நான் என. யாராவது கேட்டீங்களா" என இவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்ப சந்தோஷமா

"சந்தோஷமா... எல்லோரும் நெனச்சது நடந்துடுச்சு. ம்ம்ம்.. யாருக்கு யார் அட்வைஸ் செய்வது எனும் விவஸ்தையே இல்ல " என நடிகரும் நடன இயக்குநருமான சதீஷ் கூறியுள்ளார். வனிதாவை தான் அவரை குறிப்பிடுகிறார்.

ஆசைப்பட்டது நடந்துடுச்சு குருநாதா

"நீங்க ஆசைப்பட்டது நடந்துடுச்சு குருநாதா. முகெனை கோபப்படுத்தி அவனை கெட்டவனாக காட்ட முயற்சி செஞ்சீங்க சரியா? இதுக்கு பேரு என்ன தெரியுமா?" என கடுமையாக விமர்சித்துள்ளார் இவர்.

நோ சொன்னா நோதான்:

நோ சொன்னா நோ தான். இது பெண்களுக்கு மட்டும் தானா..? ஆண்களுக்கு இல்லையா? என்ன கொடுமையா இருக்கு..' என கோபமாக பதிவு வெளியிட்டுள்ளார் இவர். அபி சேரைத் தள்ளி விட்டால் அது தனது பாதுகாப்புக்கு. அதையே முகென் செய்தால் கோபமா என கேள்வி எழுப்பி இருக்கிறார் ஒருவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X