இதெல்லாம் ஒரு டாஸ்க்கா.. சின்னப்புள்ளத்தனமால இருக்கு.. இப்டி அசிங்கப்படுத்துறீங்களே பிக் பாஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil | Promo 1 | Day 85 |Ticket to finale task

சென்னை: டிக்கெட் டு பினாலேக்கு தரும் டாஸ்க்குகளா இவை என பிக் பாஸை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

எப்போதுமே டிக்கெட் டு பினாலே என்றால் கடினமான டாஸ்க்குகள் தான் தரப்படும். ஆனால், இம்முறை ஆரம்பத்தில் இருந்தே போட்டியாளர்கள் உடல் நோகாமல், மனம் நோகாமல் எளிதான டாஸ்க்குகளாகக் தான் கொடுத்து வருகிறார் பிக் பாஸ்.

எனவே, கடந்த சீசன்களில் லக்ஸரி பட்ஜெட்டுக்காகக் கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளே பெரும்பாலும் உடலை வருத்திக் கொள்ளும் அளவு கடினமானவைகள் தான். ஆனால் இம்முறை அப்படியில்லை.

எளிய டாஸ்க்குகள்

எளிய டாஸ்க்குகள்

கமல் கூறியது போல் போட்டியாளர்கள் சுற்றுலா வந்தது மாதிரி தான், பிக் பாஸ் வீட்டில் ஜாலியாக இருக்கிறார்கள். கிராமத்து டாஸ்க், பொம்மலாட்டம் கற்றுக் கொள்வது, திருடன் போலீஸ் என பெரும்பாலும் ஜாலி டாஸ்க்குகள் தான். இதனாலேயே டிக்கெட் டு பினாலேவுக்கும் எளிய டாஸ்க்காகக் கொடுத்துள்ளார் பிக் பாஸ்.

திட்டும் நெட்டிசன்கள்

ஆனால் இதைப் பார்த்து நெட்டிசன்கள் கோபமாகி விட்டனர். டிக்கெட் டு பினாலே டாஸ்க்குக்கு பலூன் உடைப்பது போன்ற ஜாலியான டாஸ்க்கை கொடுத்திருக்கிறீர்களே என அவர்கள் திட்டி வருகின்றனர். லெமன் ஸ்பூன் போட்டி தர மறந்துட்டீங்களே என கலாய்த்து வருகின்றனர்.

குழந்தைங்க விளையாட்டு

பலூனுக்கு காற்று நிரப்புதல், மியூசிகல் சேர், வாழைப்பழம் சாப்டுறது.. இப்டி கடுமையான டாஸ்க் கொடுங்க பிக் பாஸ்.. இதெல்லாம் ஒரு டாஸ்க்கா பிக் பாஸ்.. பலூன் உடைக்கறது எல்லாம் 3ம் வகுப்பு குழந்தைங்களே விளையாடுவாங்க' என கிண்டலாக தெரிவித்துள்ளார் இவர்.

சின்னப்புள்ளத்தனமால இருக்கு

சின்னப்புள்ளத்தனமால இருக்கு

இப்படி சின்னப்புள்ளை தனமான டாஸ்க்குகளாக கொடுத்து போட்டியாளர்களை அசிங்கப்படுத்துறீங்களே பிக் பாஸ் என்பது தான் பெரும்பாலான நெட்டிசன்களின் ஆதங்கமாக இருக்கிறது. பைனலே வரப் போகிறது இன்னும் உங்களுக்கு சீரியஸே புரியலையே என பிக் பாஸை அவர்கள் திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X