இதென்ன புது டிவிஸ்ட்.. வம்பிழுத்த வனிதா.. நெத்தியடி கொடுத்த ஷெரின்.. உடைந்தது இணைப்பிரியா நட்பு..!

பிக் பாஸ் வீட்டில் முதல் முறையாக ஷெரின், வனிதா இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

Recommended Video

Watch Video : Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 74

சென்னை: பிக் பாஸ் வீட்டில் நெருங்கிய தோழிகளாக பழகி வந்த ஷெரின், வனிதா இடையே கடுமையான சண்டை நடைபெற்றுள்ளது.

பிக் பாஸ் வீட்டை அனல் பறக்க வைத்துக்கொண்டிருக்கிறார் வனிதா. யாரையாவது வம்புக்கு இழுத்து, பிரச்சினையை உருவாக்கி பிக் பாஸ்க்கு கண்டென்ட் கொடுத்து வருகிறார். அந்த வகையில் இன்றைய முதல் புரொமோவில் புதிய டிவிஸ்ட் ஒன்று ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இதுவரை சேஃப் கேம் ஆடிவந்தவர் ஷெரின். யாரையும் பகைத்து கொள்ளாலம் சைலண்டாக காய் நகர்த்தி, 70 நாட்களை கடந்துவிட்டார். கடந்த வாரம் அவர் முதல் முறையாக நாமினேட் ஆனார். ஆனால் அப்போது எவிக்ஷன் இல்லை என்பதால் தப்பித்துவிட்டார்.

ஷெரினின் கோபம்

ஷெரினின் கோபம்

இந்த வாரம் ஷெரின் மீண்டும் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். தன்னை நாமினேட் செய்த கவின் உள்ளிட்டோர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் அவர். எனவே வனிதாவுடன் சேர்ந்துகொண்டு கவின் மற்றும் லாஸ்லியாவுடன் சண்டை போட்டு வருகிறார்.

புது டிவிஸ்ட்

புது டிவிஸ்ட்

இதில் புதிய திருப்பமாக வனிதாவுக்கும், ஷெரினுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று வெளியாகியுள்ள முதல் புரொமோவில் கார்டன் ஏரியாவில் உள்ள சோபாவில் அமர்ந்து ஷெரின், வனிதா, சாக்ஷி ஆகியோர் பேசிக்கொண்டிக்கிறார்கள். ஆட்டக் கடிச்சு, மாட்டக் கடிச்சு கடைசியில் ஷெரினை கடிக்கிறார் வனிதா. தர்ஷனை பற்றி பேசுவதைக் கேட்டு பொங்கி எழுகிறார் ஷெரின்.

போட்டு தாக்கிய ஷெரின்

போட்டு தாக்கிய ஷெரின்

தன்னை பற்றி பேசுவதை கேட்டு தாங்க முடியாத ஷெரின், வனிதாவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார். இதுவரை வனிதா தான் மற்றவர்களை கண்டமேனிக்கு பேசுவதை பார்த்திருக்கிறோம். முதல்முறை பொங்கி எழுந்த ஷெரின், வனிதாவை அடித்து துவம்சம் செய்திருக்கிறார். 'உனக்கு காமென் சென்ஸ் இருக்கா.. என்னை பற்றி பேச உனக்கு எந்த உரிமையும் இல்லை', வனிதாவை போட்டு தாக்கியிருக்கிறார் ஷெரின்.

சண்டைக்கு காரணம்

சண்டைக்கு காரணம்

நாமினேஷனில் இருக்கும் ஷெரின் தான் குறைந்த வாக்குகள் பெற்றிருக்கிறார். வனிதாவுடன் நெருங்கி பழகுவதே இதற்கு முக்கிய காரணம். ஷெரின் இதனை உணர்ந்திருப்பார் என்றே தோன்றுகிறது. அதன் காரணமாகவே வனிதாவுடன் அவர் சண்டைப் போட்டிருப்பதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X