நிஜ மகள் பேச்சால் மனம் மாறிய சேரன்.. ஷெரின் மீது புதுப்பாசம்.. லாஸ்லியா கீழ விழுந்தப்பவும் பதறலையே!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரொமோ குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 88 : Clash between kavin and sandy

சென்னை: லாஸ்லியாவிற்காக சாண்டியிடம் கவின் சண்டை போடுவது குறித்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. பிசிக்கல் மற்றும் மெண்டல் டாஸ்க்குகளாக கொடுத்து, அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறார் பிக் பாஸ்.

இதுவரை பிசிக்கல் டாஸ்க்குகள் அதிகமாக வைக்கப்படாததால் ஜாலியாக சுற்றித்திரிந்த ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் இப்போது உடல் வலிக்க விளையாடி வருகிறார். இதனால் அவர்களுக்குள் பிரச்சினைகளும் ஏற்படுகிறது.

நேற்றைய தினம் நடைபெற்ற ஒரு டாஸ்க்கில் தர்ஷனுக்கும், கவினுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது கவினுக்கு ஆதரவாக லாஸ்லியா பேசினார்.

மீண்டும் மோதல்

மீண்டும் மோதல்

இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஒரு டாஸ்க்கில் லாஸ்லியாவை சாண்டி கீழே தள்ளிவிடுகிறார். இதனால் கோபமடையும் கவின், சாண்டியை திட்டுகிறார். இதனால் பிக் பாஸ் வீட்டில் மீண்டும் மோதல் உருவாகியுள்ளது.

உண்மைக்கு ஓட்டு போடுங்க

இதுகுறித்து ரசிகர்கள் தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். இந்த புரொமோவில் காட்டப்படும் சண்டையை பொறுத்த வரை யார் மீது தவறில்லை என ஒரு கூறியுள்ளார். ஆனால் லாஸ்லியா கீழே விழுந்த போதும் சேரன் அசையாமல் நின்று கொண்டு, டாஸ்க்கில் கவனம் செலுத்துவது தான் உறுத்தலான விஷயம் என்கிறார் இவர். நிஜ மகள் அறிவுரையால் மனம் மாறி விட்டாரோ, அதனால் தான் ஷெரின் மீது பாசம் காட்டுகிறாரோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

புரிதல் வேண்டும்

"ஹேட்டர்ஸ் இந்த ப்ரோமோ உங்களுக்கு தான் எப்பவும் போல 9.30 வரை கதறிட்டு இருங்க எப்படி இருந்தாலும் அதுக்கு அப்பரமாவும் கதறிட்டு தான் இருப்பிங்க. உங்களுக்கு அத தவிர என்ன தெரியும். கவின் மற்றும் சாண்டி அவங்களுக்குள்ள எப்பவும் நல்ல அன்பு இருக்கும். நீங்க எப்படி வேணாலும் கதறுங்க", என இவர் குறிப்பிட்டுள்ளார்.

தர்ஷனுக்கு எங்கப் போச்சு அறிவு

" கேம்ல அப்படி தான் அடிப்பட செய்யும் என்று தர்ஷன் இப்போது சொல்கிறார். இதே தான் நேற்று கவின் பண்ணினார். அப்போது தர்ஷனுக்கு எங்கப் போனது இந்த அறிவு", என இவர் கேட்டுள்ளார்.

வேண்டுமென்று செய்யவில்லை

"லாஸ்லியாவை கீழே தள்ளிவிட வேண்டும் என்று சாண்டிக்கு எந்த அவசியமும் இல்லை. அவர் விளையாடுவதே இப்படி தான். கவின் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். இந்த பதற்றம் சீக்கிரம் குறையும் என நம்புவோம்", என இவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X