அபி மாதிரியே.. உன் மகளும் ‘பாட்டில் குழந்தை’யோட வந்தா என்ன பண்ணுவ?” வனிதாவுக்கு மது நறுக் கேள்வி!

பாட்டில் குழந்தை விவகாரம் தொடர்பாக மதுவின் பேச்சுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

Bigg Boss 3 Tamil: Madhumitha about bigg boss house

சென்னை: பிக் பாஸ் வீட்டில் அபி நடந்து கொண்டது போல், உன் பெண்ணும் நடந்து கொண்டால் என்ன பண்ணுவீர்கள் என வனிதாவைப் பார்த்து மோசமாக கேள்வி எழுப்பியுள்ளார் மதுமிதா.

பிக் பாஸ் வீட்டில் இம்முறை முதலில் நடந்த மிகப் பெரிய பிரச்சினையே மதுமிதா மற்றும் அபிக்கு இடையே நடந்த பாட்டில் குழந்தை விசயம் தான். முதலில் கவினைக் காதலிப்பதாகக் கூறிய அபி, பின்னர் முகென் பக்கம் தன் கவனத்தை திருப்பினார்.

ஒரே வாரத்தில் தனது வாட்டர் பாட்டிலுக்கு டயாப்பர் கட்டி விட்டு, அது தனக்கும், முகெனுக்கும் பிறந்த குழந்தை என அபி கொஞ்சியது மதுவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.

தமிழ்ப்பொண்ணு பிரச்சினை

தமிழ்ப்பொண்ணு பிரச்சினை

இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் உண்டானது. அப்போது மது தமிழ்ப் பொண்ணு பற்றி பேசியதால், ஷெரீனும் இந்த சண்டையில் இணைந்தார். வீட்டில் இருந்த அனைவரும் அபிராமி பக்கம் நின்றனர். வாக்குகளுக்காகத் தான் மது இப்படியெல்லாம் பேசுகிறார் என வனிதா விமர்சித்தார்.

மௌனவிரதம்

மௌனவிரதம்

இதனால் அப்போது மது அந்த வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். சக போட்டியாளர்கள் அவரை ஒதுக்கியதால், அப்போதிலிருந்து எல்லோருடனுமான பேச்சை குறைத்துக் கொண்டார். கடைசி வரை பெரும்பாலும் அப்படியே தான் அவர் இருந்தார். அடிக்கடி மௌனவிரதமும் இருக்கத் தொடங்கினார்.

முதன்முறையாக

முதன்முறையாக

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து கையை அறுத்துக் கொண்டதால் அதிரடியாக வெளியேற்றப்பட்ட மது, பல வாரங்களுக்குப் பின் தற்போது முதன்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது பிக் பாஸ் வீட்டில் நடந்த பல சம்பவங்கள் பற்றி அவர் கோபமாக பேசியுள்ளார். அதில் அபிராமியின் பாட்டில் குழந்தை விவகாரமும் ஒன்று.

பாட்டில் குழந்தை விவகாரம்

பாட்டில் குழந்தை விவகாரம்

இது தொடர்பாக அவர் பேசுகையில், "அபி அப்படி பாட்டிலைத் தனது குழந்தை எனக் கூறிக் கொண்டு சுற்றியது எனக்கு பிடிக்கவில்லை. உள்ளே போன மறுநாளே இந்த பொண்ணுக்கு கவின் மேல காதல் வந்துச்சி, அவர் முடியாதுன்னு ரிஜக்ட் பண்ணதுக்கு அப்புறம், அடுத்தநாள் அந்த லவ் முகேன் மீது வந்துடுச்சி, ஆறாவது நாள் அவங்களுக்கு குழந்தை பிறக்குது, இதெல்லாம் எனக்கு டிஸ்ட்ரப் ஆகுது.

பாத்திமா பாபு

பாத்திமா பாபு

இது பற்றி சரவணன் சார்கிட்டகூட பேசினேன். இந்த விசயம் பாத்திமா பாபு செய்தி வாசித்தபோது மக்களுக்கும் தெரிய வந்தது. அப்போதே நான் இதை சொல்லாதீங்க இது தப்புன்னு சொன்னேன். ஆனா இதை நான் சொல்லும்போது அத்தனை பேரும் சுத்தி சுத்தி என்னை கேள்வி கேட்டாங்க.

சாக்‌ஷியின் கேள்வி

சாக்‌ஷியின் கேள்வி

சாக்க்ஷி என்கிட்ட கேட்குது தமிழ் பொண்ணுன்னு சொல்லிட்டு பிராக் போட்டுட்டு சுத்திட்டு இருக்கன்னு, நான் கேட்டிருப்பேன் நானாவது கவுன் போட்டுட்டு சுத்தினேன், நீ ஜட்டி போட்டுட்டு சுத்துறியேனு. வனிதா ‘பாட்டில் பேபியை நீ எப்படி குறை சொல்லுவ.. அது ஜாலிக்காக பண்ணுனது தான'ன்னு சொன்னாங்க.

என்ன பண்ணுவீர்கள்?

என்ன பண்ணுவீர்கள்?

ரெண்டு பெண் குழந்தைகளுக்கு தாய் தானே நீ? ஸ்கூலுக்கு வாட்டர் பாட்டிலோடு போயிட்டு, வரும்போது, வாட்டர் பாட்டிலில் டயப்பர் கட்டிக்கிட்டு வந்து, அம்மா இந்த குழந்தை என்னோட கிளாஸ் ரூமில் இருக்கும் ஒரு பையனுக்கு பொறந்ததுன்னு சொன்னா அடிப்பியா இல்ல பெயர் சூட்டு விழா நடத்துவியா?" என ஆவேசமாகக் கேட்டுள்ளார் மது.

மதுவின் தவறான பேச்சு

மதுவின் தவறான பேச்சு

ஆனால், இந்த விவகாரத்தில் மதுவை விட வனிதாவிற்கே நெட்டிசன்களிடம் ஆதரவு கிடைத்து வருகிறது. ஏனென்றால் வனிதா பேசியது தவறென்றே வைத்துக் கொண்டாலும், அதற்காக அவரது குழந்தைகளையும் இப்படி மதுமிதா அசிங்கமாகப் பேசியது சரியல்ல என்பதே அவர்களது வாதம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X