எல்லாம் பொய்.. பக்கா டிராமா.. சித்தப்பு எல்லாமே செட்டப்பு.. மக்கள் தீர்ப்புக்கு தர்ற மரியாதையா இது?

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வனிதாவை போட்டியாளராக கொண்டு வந்திருப்பது மக்களை கோபமடையச் செய்துள்ளது.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 58 : Losliya-வின் உண்மையான முகம்- வீடியோ

சென்னை: வனிதாவை மீண்டும் போட்டியாளராக அறிவித்துள்ளதன் மூலம் மக்களை முட்டாளாக்கி இருக்கிறார் பிக் பாஸ்.

பிக் பாஸ் வீட்டில் முதல் வாரத்தில் இருந்தே பரபரப்பை கூட்டியவர் வனிதா. முதல் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பல்வேறு அலப்பறைகளை கூட்டினார். வாண்டடாக எல்லாப் பிரச்சினைகளிலும் தலையிட்டு, அதை ஊதி பெரிதாக்கி பிரச்சினை மேல் பிரச்சினைகளை வரவைத்தார். இதனால் பிக் பாஸ் வீடே சந்தைக்கடை போல தான் காட்சியளித்தது.

ஒரு வழியாக மூன்றாவது வாரமே அவர் வெளியேற்றப்பட்டார். இதனால் அப்பாடா என மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இனி, பிக் பாஸ் வீட்டில் பிரச்சினைகள் இருக்காது என நினைத்திருந்தபோது, சிறப்பு விருந்தினராக மீண்டும் உள்ளே அழைத்து வரப்பட்டார் வனிதா.

திரும்பவுமா?

திரும்பவுமா?

சரி ஒருவாரம் தங்கிவிட்டு போய்விடுவார் என பார்த்தால், மறுபடியும் பர்மனென்ட்டாக டேரா போட்டுவிட்டார். கண்டெண்ட் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்த பிக் பாஸ்க்கு வனிதா மூலம் நிறைய கண்டெண்ட்டுகள் கிடைக்க ஆரம்பித்தன. இதனால் அவரை மீண்டும் போட்டியாளராக அறிவித்துள்ளார்கள்.

மக்கள் கோபம்

மக்கள் கோபம்

ஆனால் மக்கள் வாக்களித்து வெளியே அனுப்பிய ஒருவரை மறுபடியும் போட்டியாளராக தேர்வு செய்ய பிக் பாஸ் குழுவினர் எப்படி முடிவு செய்தார்கள் என்பது அதிர்ச்சியாக உள்ளது. கடந்த இரண்டு சீசன்களிலும் இதுபோல் நடந்தது இல்லை. இதனால் பிக் பாஸ் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் மக்கள்.

கமல் பேச்சு

கமல் பேச்சு

ஒவ்வொருமுறை கமல் பேசும் போதும், பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை மக்கள் தான் எல்லா முடிவையும் எடுக்கிறார்கள் என வார்த்தைக்கு வார்த்தை கூறுகிறார். அப்படியானால் மக்களின் தீர்ப்புக்கு கமலும், பிக் பாஸும் மதிப்பளிக்கவில்லை என்பது தானே உண்மை.

டி ஆர் பி

டி ஆர் பி

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோவே இல்லை. எல்லாமே செட்டிங் தான் என்ற கருத்து பரவலாக உள்ளது. வனிதாவை மீண்டும் போட்டியாளராக்கி இருப்பதன் மூலம் அதை உண்மை என நிரூபித்திருக்கிறார் பிக் பாஸ். பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது வெறும் டிஆர்பிக்காக, பணம் சம்பாதிப்பதற்காக நடத்தப்படும் ஒரு ஸ்கிரிப்டட் ஷோ மட்டுமே.

சரவணன் விவகாரம்

சரவணன் விவகாரம்

கமல் சொல்வது போல் இதில் எந்த சமூக பொறுப்புணர்வும் இல்லை என்பது தெளிவாகிறது. மக்கள் விரும்பித்தான் வனிதாவை மீண்டும் உள்ளே கொண்டு வந்தார்கள் என்றால், சரவணன் மற்றும் மதுமிதாவையும் அதேபோல் மீண்டும் அழைத்து வருவார்களா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X