வனிதாவைப் பார்த்து ஹவுஸ்மேட்ஸுக்கு மட்டுமில்ல.. பிக் பாஸுக்கே பயம் தான்.. இல்லாட்டி அப்டி சொல்வாரா?

வனிதாவை பார்த்து பிக் பாஸ் பயப்படுகிறாரோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு வரத் தொடங்கியுள்ளது.

Recommended Video

Bigg Boss 3 Tamil : கஸ்தூரியிடம் மல்லுக்கட்டும் வனிதா- வீடியோ

சென்னை: வனிதாவை காப்பாற்ற வேண்டும் என பிக் பாஸ் முயற்சிப்பது அப்பட்டமாக தெரிகிறது.

முக்கோண காதல், அழுகாச்சி காவியம் என நடுவில் டல்லாக சென்றுகொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் பரபரப்பாக்கியவர் வனிதா. மக்கள் வாக்களித்து வெளியே அனுப்பிய வனிதாவை, விருந்தினர் எனும் போர்வையில் மீண்டும் உள்ளே அழைத்து வந்தார் பிக் பாஸ்.

வனிதா வந்ததும் வராததுமாக தனது வேலையை ஆரம்பித்தார். அபி - முகென் காதலை முறித்தது, மதுமிதாவை உசுப்பேற்றியது என ஒரே வாரத்தில் பிக் பாஸ் வீட்டை கலவர பூமியாக்கினார். இதனால் அந்த நிகழ்ச்சியின் டிஆர்பி ஏறியது.

மக்கள் கோபம்

மக்கள் கோபம்

அதன் பிறகு வனிதாவை மீண்டும் போட்டியாளராக அறிவித்தார் பிக் பாஸ். இது மக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. "நாங்கள் வெளியே அனுப்பிய ஒருவரை மீண்டும் எப்படி போட்டியாளராக்கலாம்" என மக்கள் கொந்தளித்தனர். ஆனால் அதை பற்றி எல்லாம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அலட்டிக்கொள்ளவே இல்லை.

கமலின் அமைதி

கமலின் அமைதி

மக்கள் தீர்ப்பு தான் இறுதியானது என வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் கமல் ஏன் வனிதா விஷயத்தில் மௌனமாக இருக்கிறார் என மக்கள் கேட்கத்தொடங்கினர். நிகழ்ச்சி நடத்தும் தொலைக்காட்சி எடுக்கும் முடிவில் கமல் எப்படி தலையிட முடியும் என அவரது ஆதரவாளர்கள் சப்பைக்கட்டு கட்டினர். ஆனால் இதை ஏற்க மக்கள் மறுத்துவிட்டனர்.

பள்ளிக்கூடம் டாஸ்க்

பள்ளிக்கூடம் டாஸ்க்

இந்நிலையில் இந்த வாரம் லக்சுரி பட்ஜெட்டுக்காக பள்ளிக்கூடம் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் கஸ்தூரியும், சேரனும் ஆசிரியர்களாகவும், வனிதா உள்ளிட்ட மற்ற ஹவுஸ்மேட்ஸ் மாணவர்களாக நடித்தனர். இந்த டாஸ்க்கின் முதல் நாளே வனிதாவுக்கும், கஸ்தூரிக்கும் மோதல் ஏற்பட்டது.

வனிதா புகார்

வனிதா புகார்

தன்னை வாத்து என கேலி செய்ததாக கஸ்தூரி மீது வனிதா புகார் கூறினார். அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் ஸ்டிரைக் நடக்கும் என அறிவித்தார். இதையடுத்து வனிதாவிடம் கஸ்தூரி மன்னிப்பு கேட்டார்.

சேரன் முடிவு

சேரன் முடிவு

டாஸ்க் முடிந்த பிறகு ஷெரீனிடம் பேசிய சேரன், ஸ்டிரைக் அறிவிப்பது எல்லாம் மழலையர் வகுப்பு மாணவர்கள் செய்யும் வேலை இல்லை, எனவே வனிதாவும், கஸ்தூரியும் தான் இந்த வார வொர்ஸ்ட் பெர்பாமர்கள் எனக் கூறினார். இதனால் இந்த வாரம் கஸ்தூரியும், வனிதாவும் ஜெயிலுக்கு போவார்கள் என மக்கள் நினைத்தனர்.

சிறந்த போட்டியாளர்

சிறந்த போட்டியாளர்

ஆனால் இந்த வாரம் சிறந்த போட்டியாளர் யார் என்ற கேள்வி மட்டுமே ஹவுஸ்மேட்சிடம் கேட்கப்பட்டது. சாண்டி, லாஸ்லியா, சேரன் ஆகிய மூவரும் சிறந்த போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மோசமாக விளையாடியது யார் என்ற கேள்வியே ஹவுஸ்மேட்சிடம் கேட்கப்படவில்லை.

சிறை தண்டனை ரத்து

சிறை தண்டனை ரத்து

இதன் மூலம் வனிதாவை சிறைக்கு போகாமல் காப்பாற்றுவதற்காகவே பிக் பாஸ் இப்படி நடந்துகொண்டிருப்பதாக மக்கள் நினைக்கின்றனர். வனிதாவுடன் சேர்ந்து கஸ்தூரியும் காப்பாற்றப்பட்டிருக்கிறார். வனிதா, கஸ்தூரி இருவரும் ஜெயிலுக்கு சென்றுவிட்டால் வீடே அமைதியாகிவிடும். அதன்பிறகு எபிசோடுக்கு கண்டென்ட் கிடைக்காது என பிக் பாஸ் நினைத்திருக்கக்கூடும். இதன் காரணமாகவே இந்த வாரம் சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிக் பாஸின் பயம்

பிக் பாஸின் பயம்

இந்த சீசனில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பிக் பாஸ்க்கு பயப்படுகின்றனர். ஆனால் பிக் பாஸ் பயப்படும் ஒரே ஹவுஸ்மேட் வனிதா தான் என்பது நாளுக்கு நாள் நிரூபிக்கப்பட்டு வருகிறது. வார இறுதி நாட்களில் கமல் என்னதான் திட்டிதீர்த்தாலும், பிக் பாஸ் இருக்கும் தைரியத்தால் வனிதா தனது பணியை செவ்வனே தொடர்ந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X