மதுவின் தற்கொலை முயற்சிக்கு காரணம் 'கர்நாடக' பிரச்சினையா... இதென்ன புது டிவிஸ்ட்டால்ல இருக்கு!

மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கு பின்னணியில் கர்நாடக விவகாரம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: பிக் பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயன்றதற்கு பின்னணியில் கர்நாடக விவகாரம் இருப்பதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் போட்டியாளர் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று மாலை வெளியான முதல் புரொமோவில், கையில் கட்டுடன் பிக் பாஸ் மேடையில் கமலுடன் பேசிக்கொண்டிருக்கிறார் மது.

இதன் மூலம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டிருப்பது உறுதியானது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மது தற்கொலைக்கு முயலும் அளவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக விவகாரம் காரணமா?

இந்நிலையில், டிவிட்டரில் ஒருவர் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கு காரணம் கர்நாடக விவகாரம் என குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவில், "சில ஊடக தகவலின் படி நேற்றைக்கு நடந்த ஹலோ டாஸ்கில் கர்நாடக பிரச்சினை குறித்து மது பேசியதாக தெரிகிறது. இதற்கு ஷெரீன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அனைவரும் சேர்ந்து மது பேசியது தவறு என குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். இதனால் அவர் மிகவும் கவலை அடைந்து, மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறார்", கூறியுள்ளார்.

காஜல் பதில்

அவரது இந்த பதிவை ரீ-டிவிட் செய்துள்ள நடிகை காஜல் பசுபதி, இன்றைய எபிசோடுக்காக காத்திருப்போம், அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வர வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். உண்மையை தெரிந்து கொண்டு பேசலாம். யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வளருங்க ஹேட்டர்ஸ்

"கர்நாடக விவகாரம் தொடர்பாக ஷெரீனுடன் ஏற்பட்ட சண்டை காரணமாகவே மதுமிதா தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அதற்குள் பசங்க டீம் மீது பழிபோட ஆரம்பித்துவிட்டனர். என்ன நடந்தாலும் உடனே கவின், சாண்டி தான் காரணமா? கொஞ்சமாவது வளருங்க ஹேட்டர்ஸ்", என இவர் தெரிவித்துள்ளார்.

மது பேசியதை காட்டவில்லை

மது பேசியதை காட்டவில்லை

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு நேற்று ஹலோ டாஸ்க் வைக்கப்பட்டது. ஒவ்வொரு போட்டியாளரும் முன்னர் வந்து, தாங்கள் விரும்பும் கருத்துகளை தெரிவித்தனர். தர்ஷன், சாண்டி, முகென், கவின், லாஸ்லியா, அபிராமி, கஸ்தூரி, வனிதா, ஷெரீன் ஆகியோர் பேசியதை காட்டிய பிக் பாஸ், மதுமிதா பேசியதை காட்டவில்லை. எனவே தற்போது வெளியாகியுள்ள தகவல் உண்மையாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X