For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மானக்கேடாக கேள்வி கேட்ட லாஸ்லியா அப்பா.. காதலுக்காக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாரா கவின்?

|
Bigg Boss 3 Tamil: என்ன காரித்துப்பவா உன்னை அனுப்புன?

சென்னை: லாஸ்லியாவின் அப்பா பேசிய பேச்சால் உடைந்து போன கவின், பிக் பாஸ் வீட்டில் இருந்து தன் காதலி வெற்றி பெற வேண்டும் என வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறி விட்டதாக நேற்று முன்தினம் இரவு முதல் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சரவணன் போலவே கண்ணைக் கட்டி, கன்பெக்‌ஷன் ரூமில் கவின் நிற்கிறார். அதிக தெளிவில்லாத அந்த புகைப்படத்தால் கவின் ஆர்மியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு நடந்ததாகக் கூறப்படுகிறது. எனவே அது இன்றைய எபிசோடில் தான் காட்டப்படும். எனவே, நேற்று ஒளிபரப்பான எபிசோட்டில் கவின் இருந்தார்.

லாஸ்லியா அப்பா

லாஸ்லியா அப்பா

அதோடு, நேற்று லாஸ்லியாவின் பெற்றோர் வருகையால் பிக் பாஸ் வீடே பெரும் பரபரப்பாக இருந்தது. மற்ற போட்டியாளர்களின் பெற்றோர் போல் இல்லாமல், லாஸ்லியாவின் அப்பா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும், அவரை வாங்கு வாங்கென்று வாங்கி விட்டார். இதனால் சக போட்டியாளர்களைப் போலவே மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

கவின் அதிர்ச்சி

கவின் அதிர்ச்சி

முதலில் லாஸ்லியாவின் அம்மா உள்ளே வந்த போதே, கவின் பெரும் அதிர்ச்சி அடைந்தார். அடுத்து சூறாவளியாக உள்ளே வந்த லாஸ்லியாவின் அப்பா பேசியதைக் கேட்டு அவர் மிரண்டு விட்டார் என்று தான் கூற வேண்டும். நிச்சயம் இப்படி ஒரு எதிர்ப்பு அவர்களது காதலுக்கு வரும் என அவர் எதிர்பார்க்கவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

மானம்

மானம்

லாஸ்லியா தன் பெற்றோரிடம் ஒரு புறம் கதறிக் கொண்டிருக்க, பிக் பாஸ் வீட்டிற்குள் கவின் மறுபுறம் அழுது கொண்டிருந்தார். இது பார்ப்பதற்கே மிகவும் உருக்கமாக இருந்தது. ஆனால், லாஸ்லியாவின் அப்பா பேசியது அனைத்துமே நியாயமான கருத்துக்கள் தான். ஒரு மிடில் கிளாஸ் தந்தையாக பணத்தை விட தனக்கு மானம் தான் முக்கியம் என அவர் பேசியதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

மறைமுக எச்சரிக்கை

மறைமுக எச்சரிக்கை

‘இது ஒரு கேம். அதை அப்படியே விளையாடு. எல்லாத்தையும் தூக்கிப் போட்டுடு' என மகளுக்கு அறிவுரை கூறியுள்ளனர் லாஸ்லியாவின் பெற்றோர். அதோடு, கவின் லாஸ்லியாவை வைத்து விளையாடுவதாக அவரது சகோதரிகளும் மறைமுகமாகத் தெரிவித்தனர். இதனால் லாஸ்லியா பெரும் குழப்பத்தில் இருக்கிறார்.

கவின் முடிவு

கவின் முடிவு

இதனால் இனி கவினுடன் அவர் வழக்கம் போல் பேசுவாரா என்பதே சந்தேகம் தான். இதனால் மனமுடைந்த கவின், ஓவியா மாதிரி வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அதோடு, தன்னால் தான் லாஸ்லியாவின் பெயர் கெட்டு விட்டதாகவும், தான் வெளியே சென்று விட்டால், இனி லாஸ்லியா ஒழுங்காக விளையாடுவார் என அவர் நினைத்துள்ளார்.

சிறைக்குப் போன அம்மா

சிறைக்குப் போன அம்மா

எனவே தான் அவர் அன்று நள்ளிரவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது இன்றைய எபிசோட்டில் ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தனது அம்மா பண மோசடியில் சிறைக்கு சென்ற தகவலும் அவருக்கு தெரிந்து விட்டதாக ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது.

குழப்பத்தில் ரசிகர்கள்

குழப்பத்தில் ரசிகர்கள்

இவற்றில் எது நிஜம் எனத் தெரியவில்லை. அந்தப் புகைப்படத்தின் தெளிவற்ற தன்மையும் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எது எப்படியோ பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இப்படி ஒவ்வொரு போட்டியாளராக வெளியேற வேண்டியது தேவை தானே.

English summary
A picture of BB contestant Kavin, eyes tied with black cloth and standing in confession room went viral in social medias yesterday. At first its said that Sandy's wife told Kavin about his mother arrest news, so he movd out of the BB house. But now there is a speculation that Kavin went out because of Losliya' father. As he changed his daughters mind.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more