தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை.. அன்று நடந்ததே வேறு.. மது எவிக்ட் விவகாரத்தில் புதிய டிவிஸ்ட்!

மது தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

Bigg Boss 3:Madhu தற்கொலைக்கு காரணம் Sherin

சென்னை: பிக் பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை, அவர் தன் கையை அறுத்துக் கொண்டதற்கு காரணமே வேறு என்பது தெரிய வந்துள்ளது.

டாஸ்க் ஒன்றின் போது மதுமிதா கூறிய கருத்தால், பிக் பாஸ் வீட்டில் அவருக்கும், ஷெரீனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றதாக ஒரு தகவல் வெளியானது. அதனை உறுதி செய்வது போல், கையில் கட்டுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் மது.

ஆனால் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொள்வதற்காக தன் கையை அறுத்துக் கொள்ளவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

கர்நாடகா பிரச்சினை:

கர்நாடகா பிரச்சினை:

ஹலோ ஆப் டாஸ்கில் மது, ‘வருண பகவான் கூட கர்நாடகாக்காரர் போல..கொஞ்சம் கருணை காட்டி தமிழகத்திற்கு மழை வரவழைக்கலாம்' என்று தெரிவித்துள்ளார். அதை கேட்ட கர்நாடகாக்காரரான ஷெரின், ‘இங்க எதுக்கு கர்நாடகா, தமிழ்நாடு பிரச்சனைகளை கொண்டு வருகிறீங்க, இங்க நானும் இருக்கேன்' என சொல்லியிருக்கிறார். தமிழ்ப் பொண்ணு பிரச்சினையைப் போல இதனால் ஷெரீனுக்கும், மதுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வத்திக்குச்சி:

வத்திக்குச்சி:

அப்போது இடையில் புகுந்த வனிதா, ‘மது ஓட்டுக்காக இப்படியெல்லாம் செய்வதாகவும், தனக்கு மட்டுமே நாட்டு மக்கள் மீது அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்வதாகவும், அவர் நடிப்பதாகவும்' விமர்சித்துள்ளார். இதனால் ஆவேசமான மது, தனது அக்கறை உண்மை என நிரூபிக்கவே அந்த தவறான வழியைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

சினிமாத்தனம்:

சினிமாத்தனம்:

கத்தியால் கையைக் கீறிக் கொண்ட மது, வெளியில் வழிந்த ரத்தத்தைக் காட்டி, ‘இது எந்தளவுக்கு உண்மையோ, அந்தளவிற்கு என் உணர்ச்சிகளும் உண்மை' என சினிமாத்தனமாகப் பேசியிருக்கிறார். தான் சொன்ன வார்த்தைகளை உண்மை என நிரூபிப்பதற்காகத் தான் அவர் அப்படி நடந்திருக்கிறாரே ஒழிய, அவர் தற்கொலைக்கு முயலவில்லை.

கமல் அறிவுரை:

கமல் அறிவுரை:

இதைத் தான் கமலும், உங்கள் தியாகத்தை அஹிம்சை முறையில் வெளிக்காட்டி இருக்கலாம் என குறிப்பிட்டார். மேலும் நீங்கள் செய்தது முட்டாள்தனமா, சாமர்த்தியமா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். அதோடு, அவர் கையில் கட்டு போட்டிருந்த பகுதியும் கவனிக்கப்பட வேண்டியது. அவர் தற்கொலைக்கு முயன்றிருந்தால், நிச்சயம் கட்டு வேறு இடத்தில் இருந்திருக்கும்.

இது தான் காரணம்:

இது தான் காரணம்:

எனவே, முழுக்க முழுக்க அவர் தன் வாதத்தை நிரூபிக்க வேண்டி செய்த செயல்தான் அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி இருக்கிறது. மேலும், இந்த வார நாமினேசன் லிஸ்ட்டில் அவரது பெயரும் இருந்தது இங்கே நினைவுகூரத்தக்கது. கடைசி இடத்தில் இருந்த அபிக்கு, அடுத்த இடத்தில் தான் மது இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் விதி:

பிக் பாஸ் விதி:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி, போட்டியாளர் தன்னைத் தானே இம்சித்துக் கொண்டாலோ அல்லது மற்ற போட்டியாளர்களை உடல்ரீதியாக இம்சித்தாலோ, அவர்கள் உடனடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப் படுவார்கள். அதன் அடிப்படையில் தான், தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்ட மது வெளியில் அனுப்பப்பட்டுள்ளார்.

வைரல் பதிவு:

வைரல் பதிவு:

மது கையை அறுத்துக் கொண்ட சம்பவத்தையோ, அதற்கு முன் நடந்த வாக்குவாதத்தையோ பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டவில்லை. ஆனால், பிக் பாஸ் 3 எடிட்டிங் குழுவை சேர்ந்த ஒருவர் கூறியதாக ஃபேஸ்புக்கில் வெளியான ஒரு பதிவு வைரலானது. அதில் தான் மது தன்னைத் தானே கத்தியால் கீறிக் கொள்ளும்படி என்ன நடந்தது என்பது விளக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X