சிரித்துக் கொண்டே அசிங்கப்படுத்திய கமல்.. ஹீரோனு நிரூபிச்ச தர்ஷன்.. வனிதா முகத்துல ஈயாடலையே!
வனிதாவின் செய்கைகளை நேரடியாக முகத்திற்கு நேராக கேள்வி கேட்டு அதகளப்படுத்தி விட்டார் கமல்.
Recommended Video
சென்னை : வாரம் முழுவதும் சக போட்டியாளர்களை வச்சு செய்த வனிதாவை, வஞ்சமே இல்லாமல் தன் ஸ்டைலில் வெளுத்து வாங்கி விட்டார் கமல்.
பிக் பாஸ் சீசன் 3 முடிவடைய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், நிகழ்ச்சி இப்போது சூடுபிடித்துள்ளது. நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக சக போட்டியாளர்கள் கருதி வரும் நிலையில், சேரன் சீக்ரெட் ரூமில் உள்ளார். இந்த வார கேப்டனாக லாஸ்லியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, கடந்த வாரம் ஷெரீனை வைத்து பல்வேறு களேபரங்களை செய்த வனிதாவை, நேற்று சிரித்துக் கொண்டே கேள்விகளால் வறுத்து எடுத்து விட்டார் கமல்.

கமல் கேள்வி
சிறந்த போட்டியாளர்னு உங்களை நீங்களே தேர்வு செஞ்சுக்கிட்டீங்களா என நேரடியாகவே கேட்டு வனிதாவை அசிங்கப் படுத்தினார் கமல். வாரம் முழுவதும் குட்டி கலாட்டாக்கள் செய்யும் வனிதா, வார இறுதியில் கமலுடன் மட்டும் புரியாதது போல பேசுவதும், கேள்வி மேல் கேள்வி கேட்பதும் தொடர்ந்து வருகிறது.

பிரேம் பற்றி பேச்சு
வனிதாவின் இந்த நடிப்புக்கெல்லாம் கமல் அசந்து விடுவாரா என்ன, அதனால் இந்த வாரம் நேரடியாகவே அவரிடம் பல கேள்விகளை கேட்டு அசத்தி விட்டார். பிரேம் பற்றி வனிதா பேசிய போதும், ‘நீங்க வெளியே வாங்க புரிஞ்சிடும்' என நெத்தியடியாக பதிலளித்தார் கமல்.

செம மூக்குடைப்பு
அதோடு சாண்டி, கவின் அழுததை அதிகம் காண்பித்தால் அவங்களுக்கு அதிகம் ஓட்டு விழும் என நினைக்கிறீர்களா எனவும் கமல் கேட்டார். பின் வனிதா, ‘நீங்க உங்க விளையாட்ட விளையாடுங்க, மத்த விசயத்துல மூக்க நுழைக்க கூடாது என ஓப்பனாகவே கூற அவருக்கு நோஸ்கட் போல அமைந்தது.

தர்ஷன்
கமலின் இந்த கேள்வி கணைகளால் வனிதா முகத்தில் ஈயாடவில்லை. கமலை முறைத்தபடியே அவர் கோபமாகவே அமர்ந்திருந்தார். அவரது கோபத்தில் மேலும் எண்ணெய் ஊற்றும் விதத்தில் அமைந்து விட்டது தர்ஷனின் பேச்சும், நடவடிக்கைகளும்.

தைரியமான பதில்
வனிதா தன்னைத் தானே நாமினேட் செய்து கொண்டாரா என்ற கேள்விக்கு சக போட்டியாளர்கள் மழுப்பலாக பதில் கூற, தர்ஷனோ நெற்றியடியாக ஆமாம் எனத் தெரிவித்தார். அதோடு, வெற்றியை யாரும் தியாகம் செய்யத் தேவையில்லை என்றும், வெற்றிக்காகத் தான் உழைத்து வருவதாகவும் கூறி கைத்தட்டல்களை வாங்கினார் தர்ஷன்.


Click it and Unblock the Notifications











