கமலுக்கு பெரிய கும்பிடு.. ரகசிய அறைக்கு நோ.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கஸ்தூரி!

ரகசிய அறைக்கு நோ சொல்லி பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியுள்ளார் நடிகை கஸ்தூரி.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Elimination : இந்த வாரம் யாரும் வெளியேறமாட்டார்களா?- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் கஸ்தூரி தான் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக் பாஸில் கடந்த இரண்டு சீசன்களாகவே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகை கஸ்தூரி. தனது சமூகவலைதளப் பக்கம் வழியே தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து வந்தார். இதனால் இம்முறையாவது அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே அதிகமாக இருந்தது.

ஆனால் தொடர்ந்து தான் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லவில்லை என மறுத்து வந்த கஸ்தூரி, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அதிரடியாக நிகழ்ச்சிக்குள் சென்றார்.

வைல்ட் கார்ட் எண்ட்ரி

வைல்ட் கார்ட் எண்ட்ரி

வைல்ட் கார்ட் எண்ட்ரியாக சென்ற கஸ்தூரியைப் பார்த்து சக போட்டியாளர்களுக்கு உண்மையிலேயே கொஞ்சம் பயம் வரத் தான் செய்தது. மக்களும் இனி நல்ல பொழுதுபோக்கு இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், பிக் பாஸ் எதிர்பார்த்த கண்டெண்ட் எதுவும் கஸ்தூரி தரவில்லை.

காமெடி பீஸ்

காமெடி பீஸ்

சக போட்டியாளர்கள் அவரை மீரா ரேஞ்சுக்கு ஒப்பிட ஆரம்பித்து விட்டனர். ஏறக்குறைய பிக் பாஸ் வீட்டின் காமெடி பீஸாகினார் கஸ்தூரி. வெளியில் இருந்த அளவுக்கு அவரால் பிக் பாஸ் வீட்டில் செயல்பட முடியவில்லை. டிவிட்டர் ராணியின் செயல்பாடுகள் மக்களைக் கவரவில்லை.

வனிதாவிடம் சரண்

வனிதாவிடம் சரண்

இதற்கிடையே வனிதாவும் வரவும், சரி கஸ்தூரிக்கும் அவருக்கும் இனி முட்டிக் கொள்ளும் என எதிர்பார்த்தனர். ஆனால், சண்டை ஏற்பட்ட போதெல்லாம் சரணாகதி அடைந்து, ‘அட நம்ம கஸ்தூரியா இது' என மக்களை ஆச்சர்யப்பட வைத்தார் கஸ்தூரி. தன் பெயர் வெளியில் கெட்டுப் போய் விடக் கூடாது என கவனமாக விளையாடினார்.

ரகசிய அறை

ரகசிய அறை

இந்த சூழ்நிலையில் தான் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட அவர், குறைந்த வாக்குகள் பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னரே கமல், பிக் பாஸ் வீட்டில் ரகசிய அறை இருப்பதைக் காட்டினார். எனவே, அதில் இந்த வாரம் கஸ்தூரி தங்க வைக்கப்படுவார் எனக் கூறப்பட்டது.

கஸ்தூரி மறுப்பு

கஸ்தூரி மறுப்பு

ஆனால், அதற்கு கஸ்தூரி மறுத்து விட்டதாகவும், நிகழ்ச்சியில் இருந்தே அவர் வெளியேறி விட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. எப்போதுமே ரகசிய அறையில் தங்க வைக்கப்படும் போட்டியாளர்கள், அதுவரை வீட்டில் உள்ள சக போட்டியாளர்களை நல்லவர்கள் என கருதிக் கொண்டிருப்பர்.

செட் ஆகாது

செட் ஆகாது

ரகசிய அறையில் அவர்கள் தங்க வைக்கப்படும் போது அந்தக் கருத்து மாறி விடும். எனவே வெளியில் வந்து படையப்பா ரேஞ்சுக்கு தனது இன்னொரு முகத்தைக் காட்டுவர். ஆனால் இந்தப் பார்முலா கஸ்தூரிக்கு செட் ஆகாது. ஏனென்றால், அவர் ஏற்கனவே சக போட்டியாளர்களின் உண்மையான முகத்தை வெளியில் இருந்து நன்கு படித்து விட்டுத்தான் வந்திருக்கிறார்.

தேவையில்லை

தேவையில்லை

அதோடு, தற்போது பிக் பாஸ் வீட்டிலும் அவருக்கு ஆதரவாகவோ, உற்ற நண்பராகவோ, தோழியாகவோ யாரும் இல்லை. இப்போதே ஜாடைமாடையாக கஸ்தூரியைப் பற்றி மற்ற போட்டியாளர்கள் பேசுவது அவர் காதுகளுக்கும் எட்டத்தான் செய்கிறது. எனவே, ரகசிய அறைக்குப் போய் அவர் புதிதாக தெரிந்து கொள்ள ஒன்றும் இல்லை. அதனால் தான் அவர் நிகழ்ச்சியில் இருந்து கிளம்பி விட்டதாகத் தெரிகிறது.

புரிதல்

புரிதல்

அதோடு, இதுவரை கஸ்தூரிக்கு வெளியில் இருந்த பயமும் மாறிவிட்டது. இந்த நிகழ்ச்சி மூலம் அவரை காமெடி பீசாக நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கி விட்டனர். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ஆராய்ச்சி செய்தவர் என்பதால், தான் எப்படி மக்களுக்கு வெளிப்பட்டிருப்போம் என்பதும் கஸ்தூரிக்கு இன்னேரம் புரிந்திருக்கும்.

உண்மையா?

உண்மையா?

எனவே, இனியும் நிகழ்ச்சியில் இருந்து தன் பேரைக் கெடுத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை போலும். அதனால் தான் கிடைத்த வரை லாபம் என நிகழ்ச்சியில் இருந்து கிளம்பி விட்டார் எனக் கூறப்படுகிறது. ஆனால், இது எந்தளவிற்கு உண்மை என்பது இன்று தான் தெரிய வரும்.

சம்பள விபரம்

சம்பள விபரம்

முன்னதாக ஒரு நாளைக்கு கஸ்தூரிக்கு ஒரு லட்சம் முதல் 1.5 லட்ச ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அதன்படி பார்த்தால், மீதமிருக்கும் ஐம்பது நாட்களையும் அவர் பிக் பாஸ் வீட்டில் கழித்து விட்டு அவர் ஐம்பது லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெற திட்டமிட்டிருப்பதாக ஒரு செய்தி உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X