For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிக் பாஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக.. ப்பா, கஸ்தூரி சம்பளத்தைக் கேட்டா அரண்டு போய்டுவீங்க!

|

சென்னை: தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிக சம்பளம் பெற்றுக் கொண்டு தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருக்கிறார் நடிகை கஸ்தூரி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி தான் ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை யாரோ என மக்களால் கடந்து செல்ல முடிவதில்லை. காரணம் அவர்கள் நம்மோடு, நம்மைச் சுற்றி உள்ளவர்களின் குணாதிசயங்களோடு பல சமயங்களில் ஒத்துப் போவது தான்.

அந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் முகத்திரைகள் சமயங்களில் கிழிக்கப்படுகிறது. ஆனால் சில சமயம் வெளியில் நல்ல இமேஜ் இருந்தாலும் உள்ளே கெட்ட பெயரை சம்பாதித்து விடுகிறார்கள்.

சர்ச்சை பிரபலங்கள்:

சர்ச்சை பிரபலங்கள்:

எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நிறைய பிரபலங்கள் பயப்படுவதுண்டு. அதனால் நிர்வாகமும் சர்ச்சைக்குப் பேர் போன, பிரபலமாக விரும்பும் புதுமுகங்கள் என கலவையாக போட்டியாளர்களைக் களமிறக்குகின்றனர். அந்தவகையில் பிக் பாஸ் தமிழில் ஆரம்பமான நாள்முதலே அடிபட்டு வந்த பெயர் நடிகை கஸ்தூரி.

வைல்ட் கார்ட் எண்ட்ரி:

வைல்ட் கார்ட் எண்ட்ரி:

ஆனால் அவர், ‘சீசீ இந்தப் பழம் புளிக்கும்' என்ற ரேஞ்சுக்கு ‘எனக்கு பிக் பாஸ் எல்லாம் சரிப்பட்டு வராதுப்பா..' என்றே கூறிவந்தார். இதனால் மூன்றாவது சீசனிலும் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என்றே மக்கள் நினைத்து வந்தனர். அந்த சமயத்தில் தான் கடந்த வாரம் அதிரடியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் கஸ்தூரி.

சேரன் பற்றிய விமர்சனம்:

சேரன் பற்றிய விமர்சனம்:

ஏற்கனவே, இயக்குநர் சேரன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருப்பது மக்களிடையே கலவையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் கஸ்தூரியும் உள்ளே சென்றது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த சீசன் போட்டியாளர்களைப் பற்றி தெரிந்தே தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டாரே என அவர்கள் கவலையில் உள்ளனர்.

பெரிய சம்பளம்:

பெரிய சம்பளம்:

ஆனால், காரணமில்லாமல் கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லவில்லை. முதல் இரண்டு சீசனிலும் அவர் கேட்ட சம்பளத்தை நிகழ்ச்சி தயாரிப்பு தர சம்மதிக்கவில்லையாம். எனவே, அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல மறுத்து விட்டார். ஆனால், இம்முறை அவர் கேட்ட சம்பளத்திற்கு ஓகே சொல்லி விட்டாராம் பிக் பாஸ். அதனால் தான் வைல்ட் கார்ட் மூலம் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்துள்ளார் கஸ்தூரி.

ஒரு கோடிப்பு:

ஒரு கோடிப்பு:

நமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி, கஸ்தூரிக்கு நாளொன்றுக்கு ஒன்றரை லட்சம் முதல் மூன்று லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். எனவே, மீதி ஐம்பது நாட்களை பிக் பாஸ் வீட்டில் கழித்து விட்டு, பல்க்காக ஒரு கோடி ரூபாய் சம்பளத்துடன் வெளியே வந்து விட வேண்டும் என்பது தான் கஸ்தூரியின் பிளானாம்.

இது தான் காரணம்:

இது தான் காரணம்:

வெளியில் கஸ்தூரிக்கு சொல்லிக் கொள்ளும்படி படவாய்ப்புகள் எதுவும் இல்லை. சமூகவலைதளங்களில் பதிவுகள் போடுவது, பேட்டி கொடுப்பது என்று தன்னைத் தானே பிரபலப்படுத்தி வருகிறார் அவர். ஆனால் அது வருமானத்திற்கு செட்டாகாது என்பதால்தான் அதிரடியாக பிக் பாஸ் செல்ல சம்மதித்தாராம் கஸ்தூரி.

பதுங்கும் புலி:

பதுங்கும் புலி:

இவ்வளவு பெரிய தொகை சம்பளமாகப் பேசப்பட்டிருப்பதால் நிச்சயம் கஸ்தூரியை வைத்து யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு மிரட்டலான கண்டெண்ட் கொடுக்க பிக் பாஸ் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. தற்போது கஸ்தூரி அமைதியாக இருப்பதெல்லாம், புலி பாய்வதற்காகத்தான் பதுங்குகிறது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

English summary
In the history of bigg boss Tamil, actress Kasthuri is the first person who gets huge amount as salary.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more