ஓவர்டேக் பண்ணும் வனிதா.. டக்கென களத்தில் குதித்த கஸ்தூரி.. கவின் தேரைஇழுத்து தெருவுல விட்டுட்டாங்களே

பிக் பாஸ் வீட்டில் தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் கஸ்தூரி.

Recommended Video

களத்தில் குதித்த கஸ்தூரி.. கிளம்பியது அடுத்த பஞ்சாயத்து

சென்னை: பிக் பாஸ் வீட்டில் கஸ்தூரி தனது வேலையை ஆரம்பித்துவிட்டார். தற்போது அவருடைய இலக்கு கவின் தான்.

பிக் பாஸ் வீட்டிற்கு ஒயிட்டு கார்டு மூலம் கஸ்தூரி 17வது போட்டியாளராக வந்த போதே மக்களிடம் எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது. வெளியில் உள்ளது போலவே உள்ளேயும் அவர் ஏதாவது பரபரப்பாக செய்வார் என மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் முதல் நாளோடு தனது ஆட்டத்தை நிறுத்திக்கொண்டார் கஸ்தூரி. அதற்கு ஏற்றார் போல் வனிதாவும் உள்ளே வர, சுத்தமாகவே கஸ்தூரியின் செயல்கள் எடுபடவில்லை.

கஸ்தூரியின் ஆட்டம்

கஸ்தூரியின் ஆட்டம்

கடந்த ஒரு வாரமாக வனிதா தான் பிக் பாஸ் வீட்டில் மறைமுகமாக ஆட்சி செய்து வருகிறார். அங்கு ஏற்படும் எல்லா பிரச்சினைகளுக்கும் பின்னணியில் வனிதா தான் இருக்கிறார். இப்படியே போனால் தான் வேலைக்கு ஆகமாட்டோம் என நினைத்து பிக் பாஸ் வெளியில் அனுப்பிவிடுவாரோ என்ற பயம் கஸ்தூரிக்கு வந்துவிட்டது போல. நேற்று முதல் அவரும் தன் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார்.

திட்டம்

திட்டம்

ஏற்கனவே வெளியில் இருந்து நிகழ்ச்சியை பார்த்து வந்திருப்பதால், யார் எதைப் பற்றி பேசினால் கோபமடைவார்கள் என்ற ரகசியம் அவருக்கு நன்றாகவே தெரியும். எனவே யாரை எப்படி வம்புக்கு இழுக்கலாம் என அவர் திட்டமிட்டு காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார்.

கவின்

கவின்

நேற்று கஸ்தூரியின் முதல் இலக்கு சாண்டி தான். ஆனால் சாண்டி அவருக்கு பிடிக்கொடுக்கவில்லை. எனவே அவரது கவனம் கவின் பக்கம் திரும்பியது. முதலில் கவினும் அமைதியாக தான் இருந்தார். இப்படியே போனால் கண்டெண்ட் கிடைக்காது என நான்கு பெண்கள் மேட்டரை கையில் எடுத்தார் கஸ்தூரி.

கமலிடம் புகார்

கமலிடம் புகார்

அவர் எதிர்பார்த்தது போலவே கவினும் டென்ஷனாகிவிட்டார். கோபத்தில், "சாவடிச்சிடுவேன் பார்த்துக்கோ", என வார்த்தைகளை விட்டார் கவின். இதை வைத்து இன்று கமலிடம் கஸ்தூரி புகார் அளிப்பார் என தெரிகிறது.

அவெஞ்சர்ஸ் அணி

அவெஞ்சர்ஸ் அணி

எப்படியும் கவினை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்பதில் கஸ்தூரி தீவிரமாக இருக்கிறார். கவினை பற்றி பேசினால் லாஸ்லியா சும்மா விடுவாரா? நிச்சயம் தர்ஷனும் கோபப்படுவார். அவெஞ்சர் அணி சண்டைக்கு வரும். இதை மனதில் வைத்து தான் கவின் எனும் தேரை இழுத்து கஸ்தூரி தெருவில் விட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X