எல்லாமே நடிப்பா கோபால்.. பிக் பாஸ் வீட்டுல எதுவுமே மாறலை.. தொடரும் கவின் - லாஸ் காதல்.. இதோ ஆதாரம்!

பிக் பாஸ் வீட்டில் கவின், லாஸ்லியா காதல் இன்னமும் தொடர்வது சில புகைப்படங்கள் மூலம் உறுதியாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss 3 Tamil: Kaving angry over cheran

சென்னை: பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து கவின், லாஸ்லியா தங்களது காதலைத் தொடர்ந்து வருவதாக நெட்டிசன்கள் புகைப்பட ஆதாரத்துடன் தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் இம்முறை ஆரம்பத்தில் இருந்தே காதல் பிரச்சினைதான் பிரதானமாக ஓடி வருகிறது. அங்கு நடக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்குமே ஆணி வேர் காதலாகத்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக கவின் தான் எல்லா சர்ச்சைகளுக்கும் காரணமாக இருக்கிறார்.

கடந்த வாரம் சினிமாவை மிஞ்சிவிடும் அளவிற்கு இவர்களது காதலை உடைப்பது போன்ற காட்சிகள் அங்கு அரங்கேறின.

லாஸ்லியா அப்பா

லாஸ்லியா அப்பா

லாஸ்லியாவின் அப்பா கனடாவில் இருந்து மகளைப் பார்க்க வந்தார். வந்ததுமே முதல் கேள்வியாக காதல் விவகாரத்தைக் கையில் எடுத்து காய்ச்சி எடுத்து விட்டார். இதனைப் புரொமோவில் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தான் ஒரு மிடில் கிளாஸ் அப்பாக்களின் பிரதிநிதியாக மகள் மீது இருந்த பாசத்தை வெளிப்படுத்தினார்.

கவின் அதிர்ச்சி

கவின் அதிர்ச்சி

இந்தக் காட்சிகளைப் பார்த்து மற்ற போட்டியாளர்கள் போலவே கவினும் அதிர்ச்சியில் உறைந்து தான் போனார். ஆனால், அவரிடம் லாஸ்லியாவின் குடும்பத்தார் மென்மையாகவே நடந்து கொண்டனர். இது அவர்களது நாகரீக மனப்பாங்கை காட்டுவதாக இருந்தது.

அறை கொடுத்த நண்பர்

அறை கொடுத்த நண்பர்

லாஸ்லியாவின் குடும்பம் ஒரு மாதிரி ஷாக் தந்ததென்றால், கவின் நண்பர் வேறு மாதிரி ஷாக் தந்தார். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கவினுக்கு கன்னத்தில் அறை கொடுத்து, அவரது கனவை, லட்சியத்தை மீண்டும் அவருக்கு ஞாபகப்படுத்தினார். இப்படியாக இருதரப்புமே கவின் மற்றும் லாஸ்லியாவிற்கு பிக் பாஸ் வீட்டிற்கு அவர்கள் வந்ததன் நோக்கத்தை கொஞ்சம் காட்டமாகவே எடுத்துக் கூறினார்.

முறிந்தது காதல்

முறிந்தது காதல்

இதனால் இருவருமே மனமொத்து இப்போதைக்கு காதல் வேண்டாம் என முடிவெடுத்திருப்பது போன்ற காட்சிகள் நிகழ்ச்சியில் காட்டப்பட்டன. நேற்று கமல் எபிசோட்டிலும் கூட அப்படியான காட்சிகளே இருந்தது. சரி, இருவரும் மாறி விட்டனர். இனி ஒழுங்காக விளையாடுவார்கள் என மக்கள் நம்பத் தொடங்கி விட்டனர்.

தொடரும் காதல்

தொடரும் காதல்

ஆனால், அதெல்லாம் பொய். இன்னமும் பிக் பாஸ் வீட்டில் அவர்களது காதல் தொடர்கிறது. அந்தக் காட்சிகள் நிகழ்ச்சியில் காட்டப்படுவதில்லை என்பது சில புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அதில் ஒரு புகைப்படத்தில் கவினும், லாஸ்லியாவும் ஒரே தட்டில் சாப்பாடு சாப்பிடுகின்றனர். மற்றொரு புகைப்படத்தில் இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஆர்மி மகிழ்ச்சி

ஆர்மி மகிழ்ச்சி

இதையெல்லாம் பார்க்கும் போது இன்னமும் அவர்கள் மாறவே இல்லை என்பது தான் தெரிகிறது. இந்தப் புகைப்படங்களை கவின், லாஸ்லியா ஆதரவாளர்கள் பகிர்ந்து வருகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் போது, ‘அப்போ அதெல்லாம் வெறும் நடிப்பா கோபால்' என்றே நமக்கும் கேட்கத் தோன்றுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X