கவின் வெளியேற்றத்தால் கொந்தளித்த ஆர்மி.. பிக் பாஸுக்கு எதிராக மெரினாவில் மாபெரும் போராட்டம்?

கவின் வெளியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆர்மியினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஒரு பதிவு வைரலாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 3 : Day 95 : கதறி அழும் லாஸ்-வீடியோ

சென்னை: கவின் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவின் ஆர்மியினர் சென்னை மெரினா கடற்கரையில் மாபெரும் போராட்டம் நடத்த இருப்பதாக சமூகவலைதளத்தில் ஒரு பதிவு வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி வருபவர் கவின். ஆனாலும் அவருக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் அதிக ஆர்மிக்கள் செயல்பட்டு வருகின்றன. தொடர்ந்து கவினுக்கு ஆதரவாக அவை பதிவுகள் வெளியிட்டு வருகின்றன. அதனால் தான் பன்னிரண்டு வாரங்களாக நாமினேசனுக்கு வந்தும் அதிக வாக்குகள் பெற்று கவின் காப்பாற்றப்பட்டு வந்தார்.

அவை கவின் பணம் கொடுத்து ஓட்டு போட வைக்கும் ஆர்மிக்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. கவினுக்கு எதிராகவும் சில ஆர்மிக்கள் செயல்பட்டு வருகின்றன.

லீக்கான புகைப்படங்கள்

லீக்கான புகைப்படங்கள்

இந்நிலையில் பிக் பாஸ் கொடுக்கும் ஐந்து லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற கவின் முடிவெடுத்து விட்டார். நேற்று முன்தினம் இரவே அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

ஆனால், அது இன்னமும் எபிசோட்டில் ஒளிபரப்பப்படவில்லை. இன்று இரவு நிகழ்ச்சியில் காட்டப்படும் எனத் தெரிகிறது. இன்றைய புரொமோக்களிலும் கவின் பிக் பாஸ் வீட்டில் இருப்பது போன்ற காட்சிகளே உள்ளது.

ஆர்மியினர் சோகம்

ஆர்மியினர் சோகம்

கவினின் இந்த வெளியேற்ற முடிவால் அவரது ஆதரவாளர்கள் சோகம் அடைந்துள்ளனர். கவின் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டின் உண்மையான போட்டியாளர் கவின் தான். அவருக்குத்தான் டைட்டில் தரப்பட வேண்டுமென்பது அவர்களது வாதம். கவின் இல்லை என்றால் பிக் பாஸ் இல்லை என்று குறிப்பிடும் வகையில் #nokavinnobiggboss என்ற ஹேஸ் டேக்கையும் கவின் ஆர்மி நேற்றில் இருந்து சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

மாபெரும் போராட்டம்?

மாபெரும் போராட்டம்?

இந்த சூழ்நிலையில் கவினின் வெளியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை மெரினா கடற்கரையில் மாபெரும் போராட்டம் நடத்த அவரது ஆர்மியினர் திட்டமிட்டுள்ளதாக ஒரு பதிவு வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போன்று இந்த போராட்டம் இருக்கும் என அவரது ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ஜூலி பங்கேற்பு?

ஜூலி பங்கேற்பு?

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமானவரும், பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளருமாகிய ஜூலியும் இதில் பங்கேற்கிறார் என சில பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. ஆனபோதும் இந்த பதிவு தற்போது சமூகவலைதளப் பக்கங்களில் வைரலாகியுள்ளது.

எதிர் ஆர்மியினர்

எதிர் ஆர்மியினர்

இதெல்லாம் ரொம்ப டூமச். தாங்க முடியல உங்க அலப்பறையை என கவின் ஆர்மியினரின் பதிவுகளுக்கு அவரது எதிர்ப்பாளர்கள் பதில் கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர். அதோடு சீக்கிரம் கவினை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுங்கள். எங்களை ஏமாற்றி விடாதீர்கள் பிக் பாஸ் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X