பிக் பாஸில் ஜெயிக்க கவின் இப்படி ஒரு பித்தலாட்டம் செய்கிறாரா? போட்டுடைத்த பிரபல டான்ஸ் மாஸ்டர்!
பிக் பாஸில் அதிக வாக்குகள் பெற போலி வாக்கு வங்கிகளை போட்டியாளர்கள் உருவாக்கி வைத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயிப்பதற்காக போட்டியாளர்கள் போலியான வாக்கு வங்கியை உருவாக்கி வைத்திருப்பதாக பிரபல டான்ஸ்மாஸ்டர் ஜெஃபரி தெரிவித்துள்ளார்.
இன்னும் ஒரு சில வாரங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறது. இறுதிக்கட்டத்தை நெருங்குவதால் நிகழ்ச்சி மேலும் சுவாரஸ்யமடைந்திருக்கிறது. இந்த வாரம் வனிதா வெளியேற்றப் பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆரம்பம் முதலே தொடர்ந்து நாமினேசன்னில் சேரன், கவின் போன்றோர் பெயர் இடம் பெற்று வருகிறது. ஆனால், அவர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றனர்.

நடன இயக்குநர்
இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாக ஆரம்பம் முதலே கூறப்பட்டு வருகிறது. தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் பேசியுள்ளார் பிரபல நடன இயக்குநர் ஜெஃபரி. விக்னேஷ் சிவனின் முதல் படமான போடா போடி படத்திற்கு நடனம் அமைத்துக் கொடுத்தவரான இவர், சமீபத்திய பேட்டி ஒன்றில் இது பற்றி பேசியுள்ளார்.

போலி வாக்கு வங்கி
அதில், ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்வாகி விட்டோம் எனத் தெரிந்ததுமே, தங்களுக்கென வெளியே வாக்கு வங்கி ஒன்றை தயார் செய்து விடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். அந்த வாக்கு வங்கி தான் வாரம்தோறும் சம்பந்தப்பட்ட போட்டியாளர்களை அதிக வாக்குகள் பெற வைக்கிறார்கள் என்கிறார் ஜெஃபரி.

இது தான் காரணம்
அதனால் தான் பிக் பாஸ் வீட்டில் ஒன்றுமே செய்யவில்லை என்றாலும், அல்லது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும்கூட ஒரு சிலர் தொடர்ந்து நிகழ்ச்சியில் நீடித்து வருகின்றனர். மக்களிடையே தங்களுக்கு அதிக ஆதரவு இருப்பதாகக் காட்டிக் கொள்கின்றனர்.

விளக்கம்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கவின் ஆர்மியினர் வாட்ஸ் அப்பில் இது தொடர்பாக பேசிக் கொண்டதாகக்கூட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது நினைவுகூரத்தக்கது. பின்னர் அது கவினைப் பிடிக்காதவர்கள் செய்த வேலை என அவரது நண்பர்கள் விளக்கமளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











