பிக் பாஸ் வீட்டில் மீண்டும் மோதல்.. லாஸ்லியாவுக்காக சாண்டியிடம் சண்டை போடும் கவின்.. உடையும் நட்பு!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரொமோ வெளியாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 88 : Clash between kavin and sandy

சென்னை: லாஸ்லியாவிற்காக சாண்டியிடம் சண்டை போடுகிறார் கவின்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என போட்டியாளர்கள் அனைவரும் முட்டி மோதுகின்றனர்.

இதுவரை எட்டு டாஸ்க்குகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் முகென், சாண்டி ஆகியோர் தான் அதிக புள்ளிகள் பெற்றுள்ளனர்.

 பெண்டு நமிர்த்தும் பிக் பாஸ்

பெண்டு நமிர்த்தும் பிக் பாஸ்

80 நாட்களாக ஜாலியாக கதைப் பேசி திரிந்த ஹவுஸ்மேட்ஸ்க்கு இந்த வாரம் மிகக் கடுமையான வாரமாக இருக்கிறது. பிசிக்கல் மற்றும் மெண்டல் டாஸ்க்குகளாக கொடுத்து, அனைவரையும் பெண்டு நிமிர்த்துகிறார் பிக் பாஸ். நேற்றைய எபிசோடில் நள்ளிரவில் எழப்பி தங்க முட்டையை அடைக்காக்க வைத்தார்.

மல்லுக்கட்டும் சேரன்

மல்லுக்கட்டும் சேரன்

டிக்கெட்டு டு பினாலே டாஸ்க்கில் எப்படியாவது ஜெயித்து, நேரடியாக பைனல்ஸ்க்கு போக வேண்டும் என சேரன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரது வயது, பிசிக்கல் டாஸ்க்குகளை செய்யவிடாமல் தடுக்கிறது. இருப்பினும் அவர் நேற்றைய ஒரு டாஸ்க்கில் முதலிடம் பெற்றார்.

முதல் புரொமோ

முதல் புரொமோ

இந்நிலையில் இன்றும் டிக்கெட்டு டு பினாலே டாஸ்க் தொடர்வது முதல் புரொமோ மூலம் தெரியவந்துள்ளது. அதில் லாஸ்லியாவும் சாண்டியும் மல்லுக்கட்டுகின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக லாஸ்லியா கீழே விழுந்துவிடுகிறார்.

சண்டை போடும் கவின்

சண்டை போடும் கவின்

அதைப் பார்த்து பதறும் கவின், சாண்டியிடம் கோபப்படுகிறார். 'ரொம்ப பண்ணாதடா நீ' என கவினை சாண்டி திட்டுகிறார். அதற்குகு 'யார் ரொம்ப பண்ணுறது' என எகிறுகிறார் கவின். இதனால் இருவருக்குள்ளும் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரச்சினை

ஏற்கனவே பிரச்சினை

ஏற்கனவே லாஸ்லியா விஷயத்தில் சாண்டிக்கும், கவினுக்கு சண்டை நடந்தது. ஆனால் இருவரும் அதை பெரிதுப்படுத்திக் கொள்ளவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் அதே மாதிரி பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், அவர்களின் நட்பில் விரிசில் உண்டாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X