மீண்டும் கோர்த்துவிட்ட பிக் பாஸ்.. சேரனை நேரடியாக தாக்கிய கவின்.. வாக்காலத்து வாங்கும் வனிதா..!

Recommended Video

Bigg Boss 3 Tamil: Promo1:Day71:Cheran-னை வெளியேற்றும் Kavin

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மீண்டும் ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. 17 போட்டியாளர்களில் 8 பேர் மட்டுமே இப்போது மிஞ்சியிருக்கிறார்கள். அனைவருமே முக்கியமான போட்டியாளர்கள் என்பதும் நிகழ்ச்சி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

கமல் ஏற்கனவே அறிவுறுத்தியபடி போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய கேமை ஆடத் தொடங்கியிருக்கிறார்கள். தங்களுக்கு டஃப் கொடுக்கும் போட்டியாளரை வெளியே அனுப்புவதில் அவர்கள் முனைப்பாக இருக்கின்றனர்.

 கடந்த ஒபன் நாமினேஷ்ன்

கடந்த ஒபன் நாமினேஷ்ன்

இன்று வெளியாகியுள்ள முதல் புரொமோவில் போட்டியாளர்களுக்கு ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது. அதில் முதலில் பேசும் கவின், சேரனையும், ஷெரீனையும் நாமினேட் செய்கிறார். "சேரன் பல வெற்றிகளை பார்த்தவர்கள். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் எதுவும் அவருக்கு இல்லை. எனவே வெற்றியை ருசித்திராத தங்களை போன்ற இளைஞர்களுக்கு சேரன் வழிவிட வேண்டும்", என அதற்கு அவர் காரணம் சொல்கிறார்.

 வாக்காளத்து வாங்கும் வனிதா

வாக்காளத்து வாங்கும் வனிதா

அப்போது குறுக்கிடும் வனிதா, கவின் சொல்லும் காரணத்தை ஏற்க மறுக்கிறார். இதையடுத்து "சேரனை எனக்கு பிடிக்காது. நான் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என அவர் நினைத்தார்", என கவின் நேரடியாகவே ஓபனாக அடிக்கிறார். இதனால் வீட்டில் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.

 கடந்த ஒபன் நாமினேஷ்ன்

கடந்த ஒபன் நாமினேஷ்ன்

கடந்த முறை ஓபன் நாமினேஷன் நடைபெற்ற போது 50 நாட்கள் கூட நிறைவு பெறாததால் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க வேண்டுமே என நினைத்து போட்டியாளர்கள் மென்று முழுங்கி நாமினேட் செய்தனர். அதன் காரணமாகவே ரேஷ்மா வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

 கட்டாயம் ஏதுமில்லை

கட்டாயம் ஏதுமில்லை

ஆனால் இந்த முறை போட்டியாளர்களுக்கு அந்த கட்டாயம் எதுவும் இல்லை. தங்களுடைய கேமை அவர்கள் ஆடியே ஆக வேண்டும். எனவே இன்றைய எபிசோடில் ஓபன் நாமினேஷன் அனல் பறக்கும் என்றே தெரிகிறது. இந்த வாரம் கேப்டனான வனிதாவை யாரும் நாமினேட் செய்ய முடியாது.

 முக்கிய போட்டியாளர்கள்

முக்கிய போட்டியாளர்கள்

மற்ற ஏழு போட்டியாளர்களில் குறைந்தபட்சம் நான்கு பேர் நாமினேட் செய்யப்படுவர். அவர்களில் ஒரு நிச்சயம் வெளியேறியே ஆக வேண்டும் என்பதால், இந்த வாரம் பரபரப்புகளுக்கு பஞ்சமிருக்காது என்பதை முதல் புரொமோவே காட்டிவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X