பிக் பாஸில் இருந்து வெளியேறிய கவின்.. கதவை மூட விடாமல் கதறி அழுத லாஸ்.. உருக வைத்த கவிலியா காதல்!
பிக் பாஸில் இருந்து வெளியேறும் கவினிடம் லாஸ்லியா கதறி அழும் காட்சிகள் உருக்கமாக உள்ளது.
Recommended Video
சென்னை: கதறி அழும் லாஸ்லியா மற்றும் சாண்டியிடம் இருந்து கண்ணீர் மல்க பிரியாவிடை பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் கவின்.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இன்று 95 நாட்கள் ஆகின்றன. கவின், லாஸ்லியா, சாண்டி, தர்ஷன், ஷெரின், முகென் ஆகிய ஆறு பேர் தான் இந்த வாரம் வீட்டில் இருக்கின்றனர். இதில் முகென் கோல்டன் டிக்கெட்டை வென்று இறுதிப் போட்டிக்கு நேரடியாக சென்றுவிட்டார்.
எனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அதிரடி திருப்பங்கள் அரங்கேறும் என எதிர்பார்த்தனர் ரசிகர்கள். அதன்படியே முக்கிய திருப்பமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார் கவின்.

புது ஆஃபர்
நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் ஒரு ஆஃபர் கொடுத்தார். இறுதிப் போட்டியில் அனைவரும் முதலிடம் பிடித்து ரூ.50 லட்சத்தை வெல்ல முடியாது என்பதால் தற்போது வெளியேற விரும்பும் நபருக்கு ஐந்து லட்சம் ரூ தரப்படும் என்றார். இதைக் கேட்டு போட்டியாளர்கள் அனைவரும் குழப்பம் அடைந்தனர்.

அதிர்ச்சி
ஆனால் கவின் முதல் ஆளாக எழுந்து நின்று பிக் பாஸ் டீலை ஒகே செய்தார். அதனால் சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சாண்டி மற்றும் கவினின் முடிவை மாற்ற முயன்றனர். ஆனால் கடைசி வரை கவின் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

கதறி அழும் லாஸ்லியா
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்றாவது புரொமோவில், பெட்டியுடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறார் கவின். சாண்டியும், லாஸ்லியாவும் கதறி அழுதபடி இருக்கின்றனர். கவினை பிரிய மனமில்லாமல் சிவப்பு கதவை மூடவிடாமல் கையை வைத்து தடுக்கிறார் லாஸ்லியா. இதனால் அவரது கை கதவு இடுக்கில் சிக்கிக் கொள்கிறது.

காதல் காவியம்
கவினும் லாஸ்லியாவை பிரிய முடியாமல் கண்ணீர் வடிக்கிறார். இந்த புரொமோவுக்கு 'போகாதே... போகாதே... நீ பிரிந்தால் நான் இறப்பேன்' பாடலை பிஜிஎம்மாக போட்டு உருகியிருக்கிறார் பிக் பாஸ். பார்ப்பதற்கு ஏதோ காதல் காவியம் போல இருக்கிறது புரொமோ.


Click it and Unblock the Notifications











