பிக் பாஸ் மூலம் ‘பெற்ற’ கடனை அடைத்த கவின்.. முதல் வேலையாக சிறையில் இருந்த தாய்க்கு ஜாமீன்!
கவின் தனது தாயை சிறையில் இருந்து பெயில் மூலம் வெளியே அழைத்து வந்திருக்கிறார்.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேறிய கவின் தனது தாயை சிறையில் இருந்து பெயில் மூலம் வெளியே அழைத்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர் கவின். தனது காதல் லீலைகளால் கெட்டப் பெயர் வாங்கினார். இருப்பினும் 95 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்தார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் அளித்த டீலை ஓகே செய்து, ரூ.5 லட்சத்துடன் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனால் லாஸ்லியா மற்றும் சாண்டி மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகினர்.

கவினின் சம்பளம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இந்த 95 நாட்களில் ரூ.30 லட்சத்துக்கும் அதிகமாக கவின் சம்பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே அவர் தனது கடன் பிரச்சினைகளை சமாளித்துவிடுவார் என அவரது நண்பர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தாய் கைது
இதனிடையே கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது, சீட்டு மோசடி வழக்கில் அவரது தாய்க்கு திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது. இதனால் அவரது தாய் தமயந்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

தாய்க்கு பெயில்
பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை கவினுக்கு இந்த விஷயம் எதுவும் தெரியாது. நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தான் கவினுக்கு இந்த விவரங்கள் தெரியவந்தன. இதையடுத்து அவர் நேராக சிறைக்கு சென்று தாயை பார்த்தார். பிறகு வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தை அணுகி, தாய்க்கு பெயில் பெற்று அவரை சிறையில் இருந்து வெளியே அழைத்து வந்திருக்கிறார் கவின்.

கவின் வாக்குறுதி
கவினின் தாய் தமயந்தியுடன், அவரது உறவினர் ராஜலட்சுமியும் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார். மேலும் பாதிக்கப்பட்ட சீட்டு கம்பெனி வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாக கவின் உறுதியளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த வழக்கில் இருந்து கவினின் தாய் விடுவிக்கப்படுவார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











