உண்மையில் அறை வாங்க வேண்டியது கவினின் நண்பர் தான்.. இந்த குறும்படம் பாருங்க உங்களுக்கே புரியும்

கவினை அடித்த நண்பர் பிக் பாஸ் வீட்டில் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Kavin friend about vanitha

சென்னை: தனது காதல் தந்திரத்தை தான் கவின் பிக் பாஸ் வீட்டில் பயன்படுத்தி கேம் ஆடி வருவதாக நடிகர் பிரதீப் ஆண்டனி பேசும் வீடியோ வைரலாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் காதல் மன்னனாக வலம் வருபவர் கவின். உள்ளே நுழைந்த முதல் நாளில் இருந்தே பெண் போட்டியாளர்களிடம் கடலை போடுவதையே தனது தலையாய பணியாக வைத்திருக்கிறார்.

சாக்ஷி - கவின் - லாஸ்லியா முக்கோண காதல் கதை தான் இந்த பிக் பாஸ் சீசனின் ஹாட் கண்டென்ட். இதனால் நன்றாக இருந்த கவினின் பெயர் முழுவதுமாக கெட்டுப்போனது.

பிரீஸ் டாஸ்க்

பிரீஸ் டாஸ்க்

கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது. போட்டியாளர்களை பிரீஸ் செய்ய சொல்லிவிட்டு அவர்களுடைய உறவினர்களை உள்ளே அனுப்பி உருகவைத்தார் பிக் பாஸ். இந்த டாஸ்க்கின் போது ஏகப்பட்ட காரசார நிகழ்வுகள் அரங்கேறின.

கவினுக்கு அறை

கவினுக்கு அறை

இதில் பெரிய ஹைலைட் கவினின் நண்பர் அவரை அறைந்தது தான். கவினின் அம்மா சிறையில் இருப்பதால் அவரை பார்க்க நெருங்கிய நண்பரான நடிகர் பிரதீப் தான் சென்றார். கவினை பார்த்துவிட்டு வெளியே சென்றபோது பொளேர் என ஓங்கி ஒரு அறை கொடுத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கமலிடம் விளக்கம்

கமலிடம் விளக்கம்

கவினை கண்டிக்கும் வகையில் தான் பிரதீப் இப்படி நடந்துகொண்டதாக கமலிடமும் கூறினார். ஆனால் உண்மையில் பிக் பாஸ் வீட்டில் கவின் செய்த காதல் தந்திரங்கள் எல்லாம் பிரதீப் உடையது தானாம். இதை அவரே பிக் பாஸ் வீட்டில் எல்லோர் முன்பும் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதல் ஸ்டாடர்ஜி

அந்த வீடியோவில், பிக் பாஸ் வீட்டில் உள்ள சோபாவில் அமர்ந்து அனைவருடனும் பேசிக் கொண்டிருக்கிறார் பிரதீப். அவருக்கு அருகில் கவின் இருக்கிறார். அப்போது தன்னுடைய காதல் ஸ்டாடர்ஜியை தான் கவின் பயன்படுத்தியதாக பிரதீப் ஆண்டனி கூறுகிறார். மேலும் தான் பிக் பாஸ் வீட்டிற்கு போட்டியாளராக வந்திருந்தால், பாத்திமா பாபு உள்பட எல்லோரையும் காதலித்திருப்பேன் என்கிறார் அவர்.

ராஜதந்திரி

ராஜதந்திரி

இதைகேட்டு சேரன், லாஸ்லியா, வனிதா என எல்லோருமே ஷாக்காகிறார்கள். பின்னர் லாஸ்லியாவிடம் கவினை நாமினேட் செய் என்றும் பிரதீப் கூறுகிறார். இதைபார்த்து நெட்டிசன் பிரதீப்பை செமையாக கலாய்த்து வருகின்றனர். கவினை தாங்கள் பெரிய ராஜ தந்திரி என நினைத்தோம். ஆனால் நான்கு பெண்களை காதலிப்பது கூட இவருடைய சொந்த ஐடியா இல்லையா என கேட்டு நக்கல் அடிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X