தர்ஷன் போயாச்சு.. கவினை வைத்து பிக் பாஸ் போட்ட 'பி' பிளான்.. அப்போ டைட்டில் வின்னர் இவர் தானா?
பிக் பாஸ் வீட்டில் இருந்து கவினும், தர்ஷனும் வெளியேறி இருப்பதால் டைட்டில் வின்னராக லாஸ்லியா தேர்ந்தெடுக்கப்படலாம் என தெரிகிறது.
Recommended Video
சென்னை: கவின் மற்றும் தர்ஷனின் வெளியேற்றத்தால் போட்டியாளர்களின் வாக்குகள் பிரியும் நிலை உருவாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேறிவிட்டார். லாஸ்லியா, சாண்டி, முகென், ஷெரின் தான் இறுதிப் போட்டியாளர்கள். இவர்களில் யார் வெற்றியாளர் என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை தெரியும்.
தங்களுக்கு பிடித்தமான போட்டியாளரை வெற்றி பெற வைப்பதற்கு, மக்கள் என்ன தான் கணக்கு போட்டு வாக்களித்தாலும், கடைசியில் பிக் பாஸ் போடும் கணக்கு தான் அச்சில் ஏறும். தற்போது கூட கவின் மற்றும் தர்ஷனை வெளியேற்றியிருப்பதன் மூலம் பைன்லிஸ்ட் யார் என்பதை இப்போதே முடிவு செய்துவிட்டார் பிக் பாஸ் என்றே தோன்றுகிறது.

கவினின் ஓட்டு
என்ன தான் கவினுக்கு நிறைய கெட்டப் பெயர் இருந்தாலும், அவருக்கு என ஒரு பெரிய வாக்கு வங்கி இருக்கிறது. முரட்டு சிங்கிள்ஸ் தொடங்கி ரோட் சைட் ரோமியோஸ் வரை எல்லோருமே கவின் ஆதரவாளர்கள் தான். அதனால் தான் அவர் இத்தனை வாரங்கள் எவிக்ஷனில் இருந்து தப்பித்து வந்தார்.

லாஸ்லியாவுக்கு வாய்ப்பு
தற்போது கவின் வெளியேறிவிட்டதால் அவருடைய வாக்குகள் லாஸ்லியா மற்றும் சாண்டிக்கு கிடைக்கும் என்பது கணக்கு. குறிப்பாக சாண்டியைவிட லாஸ்லியாவுக்கு தான் அதிக வாக்குகள் கிடைக்கும். ஏற்கனவே லாஸ்லியாவுக்கு என ஒரு பெரிய ஓட்டு வங்கி இருக்கிறது. அதேபோல் லாஸ்லியா இலங்கை தமிழர் என்பதால் தர்ஷனின் ஒட்டுக்களும் லாஸ்லியாவுக்கு தான் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. இதனால் லாஸ்லியா பைனலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

செல்லப்பிள்ளை சாண்டி
லாஸ்லியாவுக்கு போட்டியாக இருப்பது சாண்டியும், முகெனும் தான். அவர்கள் இருவருக்கும் பெரிய ஓட்டு வங்கி உள்ளது. குறிப்பாக முகெனைவிட சாண்டிக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் சாண்டி விஜய் டிவியின் செல்லப்பிள்ளை. இந்த காரணத்தை எல்லாம் சேர்த்து பார்த்தால், ஓட்டு வாங்கினாலும், வாங்காவிட்டாலும் சாண்டி டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

முகென் வருவாரா?
முகெனும், ஷெரினும் இவர்களுக்கு அடுத்த இடத்தில் தான் இருக்கிறார்கள். முகெனை பொறுத்தவரை, யார் வம்புதும்புக்கும் போகாமல், தான் உண்டு, தன் வேலை உண்டு என இருப்பவர். மேலும் 'பாசக்காரப் பயபுள்ள' என்ற பெயரையும் நெட்டிசன்களிடம் வாங்கி இருக்கிறார். எனவே பிக் பாஸ் நினைத்தால் முகெனை டைட்டில் வின்னராக அறிவிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ஷெரினுக்கு இல்லை
ஆனால் ஷெரினுக்கு டைட்டில் கிடைப்பது கடினம் தான். ஏற்கனவே தர்ஷன் வெளியேறிய விஷயத்தில் ஷெரின் மீது ரசிகர்களுக்கு கோபம் இருக்கிறது. இதனால் அவர் அதிக ஓட்டு வாங்குவது கஷ்டம் தான். அதேபோல் ஷெரினை டைட்டில் வின்னராக அறிவிப்பதில் பிக் பாஸ்க்கும் நிறைய சட்ட சிக்கல்கள் உள்ளன.

பிக் பாஸ் கணக்கு
அதேசமயம் சாண்டி, முகென் இவர்களில் யாராவது ஒருவர் தான் டைட்டில் வின்னர் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இருவரில் யார் முதலிடம் வந்தாலும் இரண்டாவது இடம் லாஸ்லியாவுக்கு தான் என்கிறார்கள். அதற்காக தான் கவின் வெளியேறியிருக்கிறார். முன்னமே சொன்ன மாதிரி, நாம் என்ன தான் கணக்கு போட்டாலும் கடைசி நேரத்தில் பிக் பாஸ் என்ன முடிவு எடுக்கிறாரோ, அதுவே இறுதியானது.


Click it and Unblock the Notifications











