கவின்தான் எல்லாம்.. எனக்கு அந்த தகுதியே இல்ல.. ஷெரீனிடம் மனம் விட்டு பேசிய லாஸ்லியா.. அன்சீன் வீடியோ

பிக் பாஸ் வீட்டில் ஷெரீனும் லாஸ்லியாவும் கவின் பற்றி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss 3 Tamil Unseen : கவினை பிரிந்து வருத்தத்தில் இருக்கும் பிக் பாஸ் போட்டியாளர்கள்-வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறிய பிறகு, நள்ளிரவில் ஷெரீனுடன் லாஸ்லியா பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேறினார் கவின். 95 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் பிக் பாஸ் கொடுத்த ஆஃபருக்கு சம்மதித்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார் அவர். இதனால் அவரது பணத் தேவை ஓரளவுக்கு பூர்த்தியாகும் என கவினின் ரசிகர்கள் நினைக்கின்றனர்.

ஆனால் லாஸ்லியாவும், சாண்டியும் கடைசி வரை கவினை தடுத்து நிறுத்தவே முயற்சித்தனர். கவினை எப்படியாவது போகவிடாமல் செய்ய வேண்டும் என லாஸ்லியா, அழுது புரண்டார். சாண்டியும் எவ்வளவோ எடுத்துக் கூறினார். தர்ஷன் மற்றும் முகெனும் கவினை சமாதானம் செய்தனர். ஆனால் கவின் கேட்கவில்லை. சொன்னபடியே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார்

கதறி அழுத லாஸ்லியா

கதறி அழுத லாஸ்லியா

கவின் வெளியேறியதால் மற்ற போட்டியாளர்களை விட அதிகம் பாதிக்கப்பட்டது லாஸ்லியா தான். கவின் போகும் போது தேம்பி தேம்பி அழுது கொண்டே இருந்தார். கவின் வெளியே போனதும் கதவைக்கூட மூட விடாமல் கையை விட்டுத் தடுத்தார். பின்னர் படுக்கையில் படுத்தபடியும் அழுது கொண்டே இருந்தார்.

கோரிக்கை

கோரிக்கை

தர்ஷன், முகென், ஷெரின் மற்றும் சாண்டி ஆகியோர் லாஸ்லியாவை சமாதானம் செய்தபடி இருந்தனர். மற்றொரு பக்கம் சாண்டியும் கவினின் பிரிவால் அழுதபடியே இருந்தார். கவினின் பிரிவை தாங்க முடியாத லாஸ்லியா, தன்னை வீட்டில் இருந்து வெளியேற்றும்படி பிக் பாசிடம் மன்றாடினார்.

சோகம்

சோகம்

ஆனால் அவருக்கு ஆலோசனை கூறி அனுப்பிட்டார் பிக் பாஸ். கவின் இல்லாமல் பிக் பாஸ் வீடே வெறுமை அடைந்துவிட்டதாக லாஸ்லியாவும், சாண்டியும் ஃபீல் செய்கிறார்கள். சாண்டி கூட கொஞ்சம் நார்மல் ஆகி விட்டார். ஆனால் லாஸ்லியா தொடர்ந்து சோகமாகவே காணப்படுகிறார்.

அன்சீன் வீடியோ

இந்நிலையில், கவின் வெளியேறிய அன்றைய இரவில் ஷெரினிடம் லாஸ்லியா பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த காட்சிகள் பிக் பாஸ் எபிசோடில் காட்டப்படாதவை. அந்த வீடியோ நள்ளிரவு 12.40 மணிக்கு எடுக்கப்பட்டதாகும். அதில் பிக் பாஸ் வீட்டில் கவின் தான் தனக்கு எல்லாமுமாக இருந்தான் என ஷெரினிடம் லாஸ்லியா கூறுகிறார்.

புரிதல்

புரிதல்

மேலும், " எங்களுக்கு இடையே ஒரு நல்ல நட்பு இருக்கிறது. என்னிடம் அவன் உண்மையாகத் தான் இருந்தான். திடீரென கவின் வெளியேறியதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இனிமேல் நான் எப்படி கேம் ஆடப்போகிறேன் என தெரியவில்லை. என்னோட கம்பர்டபிள் சோன் கவின் தான்", என கூறி லாஸ்லியா வருத்தப்படுகிறார்.

தகுதி இல்லை

தகுதி இல்லை

"கவின் வெளியேறியது எனக்காக தான். நான் பைனல்ஸ் போக வேண்டும் என்பதற்காக தான் அவன் வெளியேறியுள்ளான். ஆனால் பைனல்ஸ் போக வேண்டிய தகுதி எனக்கு இல்லை. கவின் நிறைய கஷ்டப்படிருக்கான். அவன் தான் பைனல்ஸ்க்கு போயிருக்க வேண்டும். நிறைய கெட்டப் பெயரை வாங்கிக்கொண்டு இவ்வளவு நாட்கள் தாக்கு பிடிச்சுருக்கான் கவின்", என்றும் லாஸ்லியா கூறுகிறார்.

கமல்

கமல்

இந்த வாரம் முகென் தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களுமே நாமினேஷனில் தான் இருக்கிறார்கள். கவின் நடுவில் வெளியேறி விட்ட போதும், இந்த வாரம் கட்டாயம் இன்னொரு எவிக்ஷன் இருக்கும் என்பது நமக்குத் தெரிந்த விசயம் தான். கமல் நாளை என்ன சொல்ல போகிறார் என்பதை வைத்து தான் அடுத்தடுத்த நகர்வுகள் அமையும். யார் பைனலுக்குப் போகப் போகிறார்கள் என்பது தெரிய வரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X