இட்ஸ் ஓவர்.. அப்பாவால் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த லாஸ்லியா.. கொடுத்தவாக்கை காப்பாற்றுவாரா கவின்?
Recommended Video
சென்னை: பெற்றோரின் எதிர்ப்பைத் தொடர்ந்து தனது காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் லாஸ்லியா. இதற்கு மறுப்பேதும் சொல்லாமல் கவினும் சம்மதம் கூறிவிட்டார்.
பிக் பாஸ் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் கதை உருவாவது நாம் பார்த்தது தான். முதல் சீசனில் ஓவியா, ஆரவ்வை விழுந்து விழுந்து காதலித்தார். அந்தக் காதல் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் ஓவியா. இதனால் பாதியிலேயே அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
இதேபோல், இரண்டாவது சீசனில் யாஷிகா, மஹத் காதல் பேசப்பட்டது. ஆனால், மஹத் ஏற்கனவே வெளியில் ஒருவரை காதலித்து வந்தார். எனவே அந்தக் காதலும் தோல்வியடைந்தது. சமீபத்தில் மஹத்திற்கும் அவரது காதலிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் அவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.

காதல் மன்னன் கவின்
இந்நிலையில் இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே கவின் காதல் மன்னனாக இருந்து வந்தார். முதலில் அவர் மீது அபிராமிக்கு கிரஷ் வந்தது. அதைத் தொடர்ந்து சாக்ஷியுடன் நெருங்கிப் பழகினார். இதற்கிடையே லாஸ்லியாவுடன் காதல் முளைத்தது. சரி இவர்களாவது தொடர்ந்து காதலிப்பார்கள் எனப் பார்த்தால், தற்போது அதற்கும் பிரச்சினை வந்து விட்டது.

திருப்பம்
லாஸ்லியாவின் பெற்றோர் நடந்து கொண்ட விதத்தால், அவர்களது காதல் தற்போது முறிந்துவிட்டது என்று தான் கூறவேண்டும். மிக அழகான ரொமான்டிக் படம் போல ஓடிக்கொண்டிருந்த கவின்-லாஸ்லியா காதல் கதையில் லாஸ்லியாவின் பெற்றோர் வருகை, மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி விட்டது.

காதல் முறிந்தது
நேற்றைய எபிசோடில் கவினுடன் தனிமையில் சென்று பேசிய லாஸ்லியா, "இட்ஸ் ஓவர் (எல்லாம் முடிந்தது). இதற்கு இப்படியே முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, இனி நாம் கேமை மட்டும் பார்ப்போம்" என அதிரடியாகக் கூறிவிட்டார். இதைக் கேட்டு கவினும் அதிகம் உணர்ச்சி வசப்படவில்லை என்பது தான் ஆச்சர்யம்.

மன்னிப்பு
ஏனென்றால் லாஸ்லியாவின் பெற்றோர் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்து அவரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தார் என்பது அவரது நடவடிக்கைகள் மூலமே தெரிந்தது. வெளியில் லாஸ்லியாவை அவரது அப்பா திட்டிக் கொண்டிருந்தபோது, உள்ளே கவினும் கதறி கதறி அழுது கொண்டு தான் இருந்தார். பின்னர் லாஸ்லியாவின் பெற்றோரைக் காயப்படுத்தியதற்காக அவர் மன்னிப்பும் கேட்டார்.

கவினுக்கும் ஓகே
எனவே, லாஸ்லியா இப்படிப் பேசியதும் அவர் மறுப்பேதும் சொல்லாமல், "இதுக்கு மேல அவங்க கஷ்டப்பட கூடாது. கஷ்டப்படுத்துற மாதிரி எதுவும் பண்ணிட கூடாது. பார்த்துக்கலாம்" எனத் தெரிவித்தார். ஆனால் இந்த வாக்கை அவர் தொடர்ந்து காப்பாற்றுவாரா என்ற சந்தேகமும் உள்ளது.

வாக்கை காப்பாற்றுவாரா?
ஏற்கனவே இதேபோல், லாஸ்லியாவிடம் இந்த வீட்டில் வைத்து காதல் பேசமாட்டேன் என்று கூறிவிட்டு, பின்னர் அந்த விதியை அவர் மீறினார் என்பது நமக்குத் தெரிந்த கதை தான். எனவே, இந்த வாக்குறுதியையும் அதேபோல் அவர் காற்றில் விட்டுவிடக் கூடாது.


Click it and Unblock the Notifications











