பாவம் லாஸ்லியா.. சேரன் மகளால் முளைத்த புதிய பிரச்சினை.. இனி கவினோடும் நோ, சேரப்பாவோடும் நோ!
இயக்குநர் சேரனின் மகள் இனி லாஸ்லியாவோடு பேசக்கூடாது என அவரிடம் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: இயக்குநர் சேரனின் நிஜ மகள் இனி லாஸ்லியாவோடு பேசக்கூடாது என கூறி இருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வந்து பார்த்துச் செல்கின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் லாஸ்லியாவின் குடும்பத்தார் வந்திருந்தனர். அப்போது லாஸ்லியாவின் நடவடிக்கைகளால் வெளியில் பெரும் அவமானமாக இருப்பதாக அவரது பெற்றோர் வருத்தப்பட்டனர்.
மறைமுகமாக கவினுடனான காதலை முறித்துக் கொள்ளும்படி அவர்கள் வலியுறுத்தினர். பெற்றோரின் வேதனையைப் புரிந்து கொண்ட லாஸ்லியாவும், கவினும் இனி அப்படிச் செய்வதில்லை என முடிவெடுத்துள்ளனர்.

காதல் முறிந்தது
இதனால் இனி பிக் பாஸ் வீட்டில் கவின், லாஸ்லியாவும் காதல் காட்சிகள் இருக்காது எனத் தெரிகிறது. இவர்களது க்யூட் காதல் காட்சிகளுக்கென்றே சமூகவலைதளங்களில் பெரும் ரசிகர் வட்டம் உள்ளது. இனி அவர்களுக்கு கண்டெண்ட் கிடைக்காது.

சேரன் மகள்
இந்நிலையில் நேற்று வந்த சேரன் மகள், லாஸ்லியாவைப் பற்றி அவருக்கு எடுத்துரைத்தார். நிஜ மகள் என்ற உரிமையில் லாஸ்லியாவுடன் இனி பேசக்கூடாது என அவர் தெரிவித்தார். அதோடு, அப்படிப் பேசினால் இனி தான் பேச மாட்டேன் எனவும் அவர் செல்லமாக கோபித்துக் கொண்டார். மகளின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல், அதனை சேரனும் ஏற்றுக் கொண்டார்.

லாஸ்லியா பாவம்
எனவே, இனி அவர் லாஸ்லியாவுடனும் கொஞ்சம் இடைவெளியை ஏற்படுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் லாஸ்லியாதான் ரொம்பப் பாவம். ஒரே சமயத்தில் கவினுடனான காதலும் முடிந்து, சேரப்பாவுடனான பாசமும் நிறுத்தப்பட்டால் ரொம்பவே திணறிப் போவார் என்பது நிச்சயம்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
சேரன் தன் மகளின் பேச்சை மீறி மீண்டும் லாஸ்லியாவுடன் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு லாஸ்லியா ரசிகர்களிடையே உள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் இனி வரும் நாட்களில் மீண்டும் பழைய படி, சேரனும், லாஸ்லியாவும் அப்பா மகள் பாசத்தைப் பிழிவார்கள் என எதிர்பார்க்கலாம். இன்னும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய 20 நாட்களுக்கும் மேல் உள்ளது. அதில் எந்தவிதமான மாற்றத்தையும் நாம் எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











