குத்துறதையும் குத்திட்டு.. இப்போ நீலிக்கண்ணீர் வடிக்கும் லாஸ்லியா.. உனக்கு வந்தா மட்டும் ரத்தமா?
பிக் பாஸ் புரொமோவில் லாஸ்லியா அழுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் இரண்டாவது புரொமோவில் சேரனை தான் நாமினேட் செய்தது குறித்து கவினிடம் பீல் பண்ணி அழுகிறார் லாஸ்லியா.
பிக் பாஸ் வீட்டில் அப்பா - மகள் பாசத்தால் மக்களை உருக வைத்தவர்கள் லாஸ்லியாவும், சேரனும். ஆனால், கடந்த இரண்டு வாரங்களாகவே அவர்களுக்குள்ளான உறவு சரியாக இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்தது.
சிறைக்கு அனுப்ப தன்னை நாமினேட் செய்ததே சேரப்பா மீது தான் கோபம் கொள்ளக் காரணம் என்கிறார் லாஸ்லியா. மகளாக பாவிக்கும் தன்னை எப்படி அவர் நாமினேட் செய்யலாம் என்பது தான் அவரது வாதம். கமலிடமும் இதையே தான் அவர் கூறினார்.

லாஸ்லியா
இந்நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேசனுக்கு சேரனின் பெயரை நாமினேட் செய்துள்ளார் லாஸ்லியா. விளையாட்டு வேறு, பாசம் வேறு என நேற்று சேரன் கூறியதன் வெளிப்பாடாகவே இது பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டாவது புரொமோவில் தான் சேரனை நாமினேட் செய்ததற்காக கதறி அழுகிறார் லாஸ்லியா.

நீலிக்கண்ணீர்
ஏற்கனவே நேற்று சேரனுடன் பேசிய பிறகு கவினுடன் தான் தனது பொழுதைக் கழித்தார் லாஸ்லியா. தற்போதும், கவினுடனேயே இது குறித்து அவர் கதைக்கிறார். உண்மையாகவே இது பற்றி அவர் வருத்தப் பட்டிருந்தால், சேரனிடமே சென்று மன்னிப்பு கோரி இருக்கலாமே. ஆனால், அதை விட்டு விட்டு இப்படி நல்லவர் போல் நீலிக்கண்ணீர் வடிக்கிறாரே என நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

நல்ல பெயர்:
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அனைவரையும் அழைத்து லிவ்விங் ஏரியாவில் வைத்து அவமானப்படுத்திய போது கூட, இப்படித்தான் எல்லோரும் நாமினேட் செய்த பிறகு மன்னிப்பு கேட்டார் லாஸ்லியா. இதன் மூலம் மக்களிடம் அவர் நல்ல பெயர் பெற்றார். அந்த வாரம் அதிக வாக்குகள் பெற்று அவர் காப்பாற்றப்பட்டார்.

டிராமா குயின்:
இந்த வாரமும் நாமினேசனில் சேரன் பெயரைக் குத்தி விட்டு, இப்போது அதற்காக வருத்தப்படுவது போல் நாடகமாடுகிறார் லாஸ்லியா என்கின்றனர் சேரன் ரசிகர்கள். லாஸ்லியா டிராமா குயின், மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசி விடுவேன் என்பவர் ஏன் இப்படி முதுகுக்குப் பின்னால் பேசுகிறார் என அவரை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











