ஒரே நாளில் ஓஹோ.. இணையத்தை தெறிக்க விட்ட லாஸ்லியா அப்பா.. ஆர்மிலாம்கூட ஆரம்பிச்சுட்டாங்கப்பா!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 3 :Day 80 : Losliya father entry to BB House

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக வந்த லாஸ்லியாவின் தந்தை, ஒரே நாளில் மக்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை கடந்துள்ளது. சேரனையும் சேர்த்து 8 போட்டியாளர்கள் தான் இருக்கிறார்கள். இவர்களில் வனிதாவை தவிர வேறு யாரும் நடுவில் தங்கள் குடும்பத்தினரை பார்க்கவில்லை. எனவே மற்ற ஹவுஸ்மேட்ஸ் எல்லாம் தொய்வின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒவ்வொருவரின் குடும்பத்தினராக பிக் பாஸ் வீட்டிற்கு வந்து போகின்றனர். முதலில் முகெனின் அம்மாவும், தங்கையும் வந்து சென்றனர். இதனால் முகென் உற்சாகமடைந்தார்.

லாஸ்லியா அப்பா

லாஸ்லியா அப்பா

அதன் தொடர்ச்சியாக நேற்றைக்கு லாஸ்லியாவை பார்க்க அவரது அப்பா, அம்மா மற்றும் இரண்டு தங்கைகளும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருந்தனர். இந்த எபிசோட் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. முதலில் லாஸ்லியாவின் அம்மாவும், இரண்டு தங்கைகளும் தான் வீட்டிற்கு வந்தனர். லாஸ்லியாவை பார்த்ததும் அவர்கள் கட்டியணைத்து பாசத்தை வெளிப்படுத்தினர்.

திட்டிய அப்பா

திட்டிய அப்பா

பிறகு சிறிது நேரம் கழித்து லாஸ்லியாவின் அப்பா வீட்டிற்குள்ளே வந்தார். 10 வருடங்கள் கழித்து அப்பாவை பார்த்ததால், லாஸ்லியா வெடித்து அழுதார். ஆனால் முதலில் அவர் பெரிதாக ரியாக்ஷன் எதுவும் கொடுக்கவில்லை கோபமாகவே இருந்தார். பிறகு லாஸ்லியாவை கடுமையாக சாடினார்.

கவின் அழுகை

கவின் அழுகை

"மத்தவங்க எல்லா காறித்துப்பவா நீ இங்க வந்த", என லாஸ்லியாவிடம் கோபப்பட்டார். இதனால் லாஸ்லியா மேலும் வெடித்து அழ ஆரம்பித்துவிட்டார். கவின் வீட்டிற்குள் ஓடி போய் அழுதார். அவரை சக போட்டியாளர்கள் தேற்றினர். லாஸ்லியா தனது தந்தையை கட்டியணைத்து அழுதபடியே இருந்தார்.

மனம் மாறிய அப்பா

மனம் மாறிய அப்பா

இதையடுத்து தானும் கண்கலங்கிய லாஸ்லியாவின் அப்பா, தன் மகளை பற்றி தனக்கு தெரியும் என்றும் ஊரார் தவறாக பேசுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை எனக் கூறி வருத்தப்பட்டார். மேலும், காசுக்காக தான் தனது மகளை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பவில்லை என திட்டவட்டமாகக் கூறினார்.

சேரனுடன் பேச்சு

சேரனுடன் பேச்சு

இது ஒரு கேம் ஷோ என்றும், விளையாட்டை விளையாட்டாக மட்டுமே விளையாடும்படி லாஸ்லியாவுக்கு அறிவுறுத்தினார். சேரனை கட்டியணைத்து நீண்ட நேரம் பேசினார் லாஸ்லியா அப்பா. பிறகு கவினுடனும் சகஜமாக பேசினார் அவர். மற்ற போட்டியாளர்களிடமும் சிரித்து பேசி அறிவுரைகளை வழங்கினார்.

ஒரே நாளில் ஹீரோ

ஒரே நாளில் ஹீரோ

லாஸ்லியா தந்தையின் இந்த செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. மகளை திட்டியது, கோபப்பட்டு பேசியது, அழுதது, கவினிடம் கோபத்தைக் காட்டாமல் நாகரீகமாக அவர் பேசிய விதம் என ஒவ்வொரு விஷயத்தை பற்றியும் நெட்டிசன்கள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். இதனால் சமூக வலைதளங்களில் லாஸ்லியா அப்பா ஒரே நாளில் ஹீரோவாகிவிட்டார்.

ஆர்மி

ஆர்மி

காமன்மேன், மிடில் கிளாஸ் அப்பாக்களின் பிரதிநிதி என லாஸ்லியாவின் அப்பாவை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். பார்ப்பதற்கு அசப்பில் சேரனைப் போலவே இருக்கும் அவருக்கு ஆர்மிகூட சிலர் ஆரம்பித்து விட்டனர். ஒரே நாளில் நவரசங்களையும் காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் லாஸ்லியா அப்பா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X