“காசுக்கா உன்ன அனுப்பினேன்.. அதுக்கு பிச்சை எடுக்கலாம்” தந்தைகளின் பிரதிநிதியான லாஸ்லியா அப்பா!

காசுக்காக லாஸ்லியாவை பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பவில்லை என அவரது அப்பா தெரிவித்துள்ளார்.

Recommended Video

Bigg Boss 3 Tamil: என்ன காரித்துப்பவா உன்னை அனுப்புன?

சென்னை: பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவின் அப்பா பேசிய யதார்த்தமான பேச்சு தான் இப்போது இணையத்தின் ஹாட் டாபிக்கே.

லாஸ்லியா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதல் தன் அப்பாவைப் பற்றித் தான் அதிகம் பேசி வருகிறார். தனது அப்பா சேரனைப் போல் இருப்பார் எனக் கூறினார். சேரனையும் அப்பாவாகவே அவர் அழைக்கத் தொடங்கினார். இதனாலேயே அவரது அப்பாவை மற்றும் குடும்பத்தினரைப் பார்க்க வேண்டும் என மக்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று அவரது குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருந்தனர். சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு தன் அப்பாவை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் வாய் விட்டு கதறி அழுதார் லாஸ்லியா.

காதலால் கோபம்

காதலால் கோபம்

ஆனால், ஆரம்பத்தில் ரொம்ப கோபமாகவே இருந்தார் அவரது அப்பா. அதற்குக் காரணம் பிக் பாஸ் வீட்டில் கவினுடனான லாஸ்லியாவின் காதல். சேரன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அதனைக் கேட்காமல் லாஸ்லியா கவினோடு பேசுவதால் இணையத்தில் அவரது பெயரும் டேமேஜாகி இருக்கிறது.

லாஸ்லியாவின் பெற்றோர்

லாஸ்லியாவின் பெற்றோர்

தன் மகளைப் பற்றி பலரும் பலவிதத்தில் பேசுவதை எந்தப் பெற்றோராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனை நேற்று அழகாக வெளிப்படுத்தினர் லாஸ்லியாவின் பெற்றோர். அதிலும் குறிப்பாக லாஸ்லியாவின் அப்பா பேசியவை அனைத்தும் இயல்பாக அதே சமயம் காட்டமாக இருந்தது.

வேதனை

வேதனை

மகளைப் பார்ப்பதற்காக கனடாவில் இருந்து கிளம்பிய அவரை, நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களே அசிங்கமாகப் பேசியதாக சேரனிடம் வருத்தப்பட்டார். என் முகத்துக்கு நேராகவே மோசமாகப் பேசுகிறார்களே, அப்படியென்றால் பின்னால் என்னவெல்லாம் பேசுவார்கள் என அவர் வேதனையுடன் கூறினார்.

காசா முக்கியம்

காசா முக்கியம்

மேலும் லாஸ்லியாவிடம், "நான் போகவேணாம்னு தானே சொன்னேன். நீ என்ன சொல்லிட்டு வந்த.. கேம் ஷோனு தானே சொன்ன. ஆனா இப்போ என்ன பண்ணிட்டு இருக்க. நான் உன்னை அப்டியா வளர்த்தேன். காசா முக்கியம்.. காசுக்காகவா உன்னை நான் இங்கே அனுப்பி வச்சேன். இதுக்கு பிச்சை எடுப்பேன்.

மானம்தான் முக்கியம்

மானம்தான் முக்கியம்

யாரிடமும் மானத்தை இழந்து தலைகுனிந்து வாழக்கூடாது. . காறித்துப்புவதை பார்க்க வைத்துவிட்டாய். நானொன்றும் பரம்பரை பணக்காரன் இல்லை. ஆனால் இப்போ குடும்பத்தை நல்லா தானே வச்சிட்டு இருக்கேன். ஊரில் மானம் தான் முக்கியம். இதெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வா. கேமை கேமாக மட்டும் விளையாடிட்டு வா" என கடும் கோபத்துடன் கூறினார்.

சேரன்

சேரன்

அப்பாவின் கோபத்தை சற்றும் எதிர்பார்க்காத லாஸ்லியா, அவரை கட்டிபிடித்து அழ ஆரம்பித்தார். இதனால் சற்று கோபம் தணிந்த அவரது அப்பா, லாஸ்லியாவால் தான் பட்ட, படும் அவமானங்கள் குறித்து மகளிடம் மென்மையாக எடுத்துக் கூறினார். சேரன் இருக்கும் நம்பிக்கையில் தான் இருப்பதாக லாஸ்லியாவின் அம்மாவும் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X