‘காதலுக்கு மரியாதை’ செய்த கவின் - லாஸ்லியா.. யார் யாருக்கெல்லாம் விஜய்-ஷாலினி ஞாபகம் வந்துச்சு?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதலுக்கு மரியாதை ஸ்டைலில் கவின் - லாஸ்லியா காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டில் கவின், லாஸ்லியா நடந்து கொண்டதைப் பார்க்கும் போது காதலுக்கு மரியாதை காட்சி தான் நினைவுக்கு வந்தது.
பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பம் முதலே கலர்புல்லாகவும், யூத்புல்லாகவும் இருக்க கவினும், லாஸ்லியாவும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. முதலில் முக்கோணக் காதல் பல பிரச்சினைகளை உருவாக்கியது.
சாக்ஷி வெளியே சென்ற பிறகு முக்கோண காதல் கதை முடிவுக்கு வந்தது. இதையடுத்து கவினும் லாஸ்லியாவும் லவ் பேர்ட்ஸ் போல் பிக் பாஸ் வீட்டில் பறந்து திரிந்தனர். இது சேரன், வனிதா கண்களை உறுத்தவே, இதிலும் பிரச்சினை வெடித்தது.

கண்டித்த சேரன்
லாஸ்லியாவை மகள் போல் பாவித்த சேரன், கவின் உடனான உறவை துண்டிக்க சொல்லி கட்டாயப்படுத்தினார். இதனால் அவர்கள் இருவருக்கு இடையே விரிசல் உருவானது. ஓரிரு நாட்கள் லாஸ்லியாவையும், கவினையும் கமலும் கண்டித்தார். ஆனால் அவர்கள் யார் பேச்சையும் கேட்கவில்லை.

காதலுக்கு முற்றுப்புள்ளி
இந்நிலையில் நேற்று முன்தினம் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த லாஸ்லியா அப்பா, அவரை கடுமையாக திட்டினார். இதையடுத்து வேறு வழியே இல்லாமல் தனது காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் லாஸ்லியா.

காதலுக்கு மரியாதை
பிக் பாஸில் கவின் - லாஸ்லியா பிரிந்த காட்சிகளைப் பார்க்கும் போது, ஏனோ காதலுக்கு மரியாதை விஜய், ஷாலினி தான் நம் நினைவிற்கு வருகின்றனர். அப்படத்திலும் பெற்றோருக்காக அவர்கள் தங்களது காதலை விட்டுக் கொடுத்து விடுவார்கள். ஆனால், இறுதியில் இரண்டு குடும்பமும் சேர்ந்து அவர்களை மீண்டும் சேர்த்து வைத்து விடுவார்கள்.

அதே க்ளைமாக்ஸ் வருமா?
நிஜத்திலும் அப்பட கிளைமாக்ஸ் போலவே கவின் -லாஸ்லியா காதலும் முடிய வேண்டும் என்பது தான் அவர்களது ரசிகர்களின் ஆசை. ஏற்கனவே வெளியில் ஏகப்பட்ட பிரச்சினைகளில் கவின் சிக்கியிருக்கிறார். எனவே இனியாவது பிக் பாஸ் வீட்டில் தன் பெயரைக் கெடுத்துக் கொள்ளாமல் லாஸ்லியாவும், கவினும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











