நாமினேசன்.. சேரனின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் உடைத்த லாஸ்லியா.. எல்லாம் நீங்க கற்று தந்த பாடம்தான்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எவிக்ஷனுக்கு இயக்குனர் சேரனை நாமினேட் செய்துள்ளார் லாஸ்லியா.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எவிக்ஷனுக்கு இயக்குனர் சேரனை நாமினேட் செய்து, அவரது நம்பிக்கையை சுக்கு நூறாக உடைத்துள்ளார் லாஸ்லியா.
பிக் பாஸ் வீட்டில் திங்கட்கிழமை வந்து விட்டாலே ஒரு பதற்றம் தொற்றிக் கொள்ளும். காரணம் அன்று தான் அந்த வாரத்திற்கான நாமினேசன் புராசஸ் நடக்கும். கமல் சொல்லும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நிச்சயம் இந்த நாமினேசனுக்கு நூறு சதவீதம் பொருந்தும்.
பக்கத்திலேயே அமர்ந்து சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவர்கள் கூட, கன்பெக்சன் ரூமுக்குப் போனதும் மாறி விடுவார்கள்.

நாமினேஷன் நடைமுறைகள்
தனது காதலரை, அப்பாவாக நினைப்பவரை, உற்ற தோழியை என யாரை வேண்டுமானாலும் நாமினேட் செய்வார்கள். சமயங்களில் இதில் எதிரிகள் கூட தப்பித்து விடுவார்கள். பாசம் காட்டுபவர்கள் தான் மாட்டிக் கொள்வார்கள். அவர்களது தப்பு தான் பெரிதாக எடுத்துக் கூறப்படும் அங்கு.

சேரன் நம்பிக்கை
அந்தவகையில் இன்று வெளியான முதல் புரொமோவில் லாஸ்லியா, சேரனை நாமினேட் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. லாஸ்லியா கன்பெக்சன் ரூமுக்கு உள்ளே இருக்கும் அதே நேரத்தில் சேரன் லிவிங் ஏரியாவில் கஸ்தூரியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அவர், லாஸ்லியா எக்காரணத்தைக் கொண்டும் தன்னை நாமினேட் செய்ய மாட்டார் எனக் கூறுகிறார்.

மக்கள் அதிர்ச்சி
ஆனால், அவரது நம்பிக்கைக்கு மாறாக லாஸ்லியா அவரைத் தான் நாமினேட் செய்துள்ளார். இது பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், கொஞ்சம் ஆற அமர உட்கார்ந்து யோசித்தால் லாஸ்லியா பக்கம் இருக்கும் நியாயம் புரியும். இது லாஸ்லியாவுக்கு சேரன் கற்றுத் தந்த பாடம் தான்.

சிறைச்சாலை
கடந்த ஒரு வாரமாக சேரனும், லாஸ்லியாவும் சரியாகப் பேசிக் கொள்ளவில்லை. அதற்குக் காரணம் கடந்த வாரம் டாஸ்க் சரியாக விளையாடவில்லை என லாஸ்லியா பெயரை சேரன் கூறினார். இதனால் அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களாக சிறையில் அவதிப்பட்டவர் லாஸ்லியா.

லாஸ்லியாவின் கோபம்
மூன்றாவது வாரமும் தன்னை சிறைக்கு அனுப்ப சேரப்பா காரணமாகி விட்டாரே எனக் கோபம் அவருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு வாரமாக சேரனுடன் அவர் சரியாக பேசவில்லை. சேரனும் அவரிடம் பேசவில்லை. இது பார்ப்பவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

பஞ்சாயத்து செய்த கமல்
நேற்று கமல் முன்னிலையில் கூட இந்த விவகாரம் மீண்டும் எழுப்பப்பட்டது. அப்போது சேரனும் லாஸ்லியாவும் தங்கள் பக்க நியாயங்களை எடுத்துக்கூறினர். விளையாட்டு என்பது வேறு, அப்பா மகள் பாசம் என்பது வேறு என சேரன் கூறினார். அதோடு தான் நியாயமாக நடந்து கொண்டால் மட்டுமே தன் மகளுக்கும் பெருமை என்றார் அவர்.

மனஸ்தாபங்கள் மறைந்தது
பின்னர் சேரனும் லாஸ்லியாவும் இரவு தனிமையில் பேசினர். அப்போது அவர்களுக்கு இடையே இருந்த மனஸ்தாபங்கள் மறைந்தது. இருவரும் வழக்கம் போல், குட்நைட் எல்லாம் சொல்லிக்கொண்டனர். அப்படி இருக்கையில் இன்று லாஸ்லியா சேரனை நாமினேட் செய்திருப்பது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கற்றுக்கொடுத்த பாடம்
ஆனால் இது சேரன் கற்றுக்கொடுத்த பாடம் தான். விளையாட்டு என்பது வேறு, உறவு என்பது வேறு என்பதை புரிந்துகொண்ட லாஸ்லியா, தன் மனதிற்கு நியாயமென பட்டபடியே சேரனை நாமினேட் செய்துள்ளார். இருந்தாலும் லாஸ்லியாவின் இந்த முடிவு விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











