Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சார் லாஸ்லியா சார்.. வெட்கப்படுது சார்.. ஆர்மி கைஸ் நோட்பண்ணுங்கப்பா நோட்பண்ணுங்கப்பா..!
பிக் பாஸ் இன்றைய 3வது புரொமோவில் லாஸ்லியா வெட்கப்படும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய 3வது புரொமோவில் லாஸ்லியா வெட்கப்பட்டு சிரிக்கும் காட்சிகள் வைரலாகியுள்ளன.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரொமோவில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பள்ளிக்கூட டாஸ்க்கில் ஜாலியாக ஈடுபட்டிருப்பது மட்டுமே காட்டப்பட்டது. அதில் ஷெரீன் அழகாக தனக்குத் தெரிந்த தமிழில், '"சேத்துகுள்ள சின்னபொண்ணு தத்தி தத்தி சிக்கிக்குச்சு" எனச் சொல்கிறார்.
அவர் சொல்வதைப் பார்க்கும் போது, முதல் சீசனின் 'கொக்கு நெட்ட.. கொக்கு நெட்ட..' என ஓவியா பாடியது ஞாபகத்திற்கு வருகிறது.
சண்டை
மதியம் வெளியான 2வது புரொமோவில், நேற்றைய தினம் போலவே கஸ்தூரியும், வனிதாவும் இன்றும் சண்டைப்போட்டுக்கொள்கின்றனர். வாக்குவாதத்தில் ஈடுபடும் வனிதாவுக்கு கஸ்தூரி பதிலடி கொடுக்கிறார். இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம், சேரன், லாஸ்லியா உள்ளிட்டோர் நாய் போல் விதவிதமாய் குரைப்பதை காட்டுகின்றனர். இது ஏதோ கிண்டல் செய்வது போல் அமைந்திருந்தது.
மீண்டும் காதல்
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரொமோவில் கவினும், லாஸ்லியாவும் ஏதோ பேசிக்கொண்டிருக்கின்றனர். கவின் சொல்வதைக் கேட்டு லாஸ்லியா கைகளால் கண்களை மூடிக்கொண்டு வெட்கப்படுகிறார். பின்னணியில் ஆடுகளம் படத்தின் "தனனனதானே தனனானா தனதனானா" ஹம்மிங் ஒலிக்கிறது. எனவே இன்றைய எபிசோடில் காதல் காட்சிகளும் நிறைந்திருக்கும் என்றே தெரிகிறது.
|
வேற லெவல் கெமிஸ்ட்ரி
இந்த புரொமோவை பார்த்த நெட்டிசன்கள் லாஸ்லியாவின் வெட்கத்தை பார்த்து சிலாகித்து கமெண்ட் செய்து வருகின்றனர். "இவங்க ரெண்டு பேருக்கும் ஜோடியாக கட்டாயம் பட வாய்ப்புகள் வரும். கெமிஸ்ட்ரி வேற லெவல்", என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
|
ரசிகர்கள் மகிழ்ச்சி
"இத பார்க்கும் போது புல்லரிக்குதுபா. யோவ் எடிட்டர் உண்மையை சொல்லு, நீயும் கவின் லாஸ் ரசிகர் தானே", இவர் கேட்டுள்ளார். இத்தனை நாட்கள் எபிசோடில் லாஸ்லியா வெட்கப்படும் இந்த புரொமோவை தான் ரசிகர்கள் வெகுவாக ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.