"நீ மூடிட்டுப் போ".. மதுவை பார்த்து அசிங்கமாக சைகை காட்டிய லாஸ்லியா.. மைனாம்மாவைக் கண்டிப்பாரா கமல்?

சண்டையின் போது மதுவைப் பார்த்து லாஸ்லியா ஜாடைக் காட்டியது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சென்னை: சண்டையின் போது மதுமிதாவைப் பார்த்து நீ மூடிட்டுப் போ என லாஸ்லியா கூறியது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் வீடே கடந்த சில நாட்களாக சண்டையும், சச்சரவுமாகத்தான் இருக்கிறது. சேரன், மது, கஸ்தூரி ஒரு அணியாகவும், லாஸ்லியா, கவின், சாண்டி, தர்ஷன் மற்றும் முகென் ஒரு அணியாகவும் உள்ளனர். ஷெரீன், அபி மற்றும் வனிதா ஆகியோர் இரண்டு அணிகளுடனும் நட்பு பாராட்டி வருகின்றனர்.

இந்த வாரம் சண்டையில் மக்களை அதிகம் ஆச்சர்யப்படுத்தியவர் லாஸ்லியா தான். இந்தப் பொண்ணுக்கு கோர்வையா பத்து வாக்கியம் பேசத் தெரியுமா என நினைத்தவர்களே வாயடைத்துப் போகும் அளவிற்கு வாயாடி வருகிறார். அதுவும் சண்டைகளில் அவர் எடுத்து விடும் ஒவ்வொரு பாயிண்ட்டும் நச் ரகம்.

சைகை:

சைகை:

ஆனால் வர வர எல்லை மீறி வருகிறாரோ லாஸ்லியா என்ற சந்தேகமும் நமக்கு வரத்தான் செய்கிறது. காரணம் நேற்றைய சண்டையில் மதுவைப் பார்த்து அவர், ‘நீ வாயை மூடிட்டுப் போ' என்பது போல் ஜாடைக் காட்டினார். மதுவும் அதற்குப் பதில் கொடுத்தார் தான். ஆனால், லாஸ்லியாவிடம் இருந்து இதை சத்தியமாக யாரும் எதிர்பார்க்கவில்லை.

ரசிகர்கள் வாதம்:

ரசிகர்கள் வாதம்:

அழகு பொம்மையாக, அனைவரிடமும் சிரித்துப் பேசும் இனிமையான பெண்ணாக இருந்த லாஸ்லியா இப்படி ஆகிவிட்டாரே என அவரது ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர். சாதாரண சண்டைகளுக்காக எல்லாம் இப்படி தன்னைத் தானே தரம் தாழ்த்திக் கொள்வது சரியல்ல என்பதே அவர்களது வாதம்.

கமல் கண்டனம்:

கமல் கண்டனம்:

முதல் சீசனில் காயத்ரி, முடியைக் காட்டி சைகை செய்ததையே கமல் கடுமையாக விமர்சித்தார். அப்படிக்கூறக் கூடாது என அவரைக் கண்டித்தார். தற்போதும் அதே போல், லாஸ்லியாவைக் கமல் கண்டிப்பாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. மது பேசியது தவறாகவே இருந்தாலும், தன்னை விட வயதில் மூத்தவரிடம் லாஸ்லியா அப்படி நடந்து கொண்டது சரியில்லை என்பதே அவர்களது குற்றச்சாட்டு.

கவினால் பகை:

கவினால் பகை:

இதுவரை பிக் பாஸ் வீட்டில் அனைவருக்கும் பிடித்தவராக இருந்த லாஸ்லியா தற்போது பகையை வளர்த்துக் கொண்டுள்ளார். சேரனைப் பேசிய போது கூட அமைதியாக இருந்தார். ஆனால் கவினைப் பேசியதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி கோபப்பட்டு தன் பெயரைக் கெடுத்துக் கொண்டுள்ளாரே லாஸ்லியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X