தற்கொலைக்கு முயற்சித்த மது.. அதிரடியாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றம்.. ஷாக் தரும் புரொமோ!

பிக் பாஸ் போட்டியாளர் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளார்.

சென்னை: பிக் பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்த நடிகை மதுமிதா, நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக இரு அணிகளாக பிரிந்து சண்டை நடந்து வருகிறது. இதில், ஆண்கள் அணியில் லாஸ்லியாவும், பெண்கள் அணியில் சேரனும் உள்ளனர். முதலில் கவினுக்கும், மதுமிதாக்கும் இடையே சண்டை உண்டானது. அதில், பிக் பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்கள், பெண் போட்டியாளர்களை அடிமைப்படுத்துவதாக மது குற்றம் சாட்டினார்.

இது தொடர்பான சண்டை நேற்றும் தொடர்ந்தது. சேரன் சமாதானம் செய்கிறேன் பேர்வழி என தர்ஷனையும், மதுவையும் பேச வைக்க, அது மற்றொரு சண்டையில் போய் முடிந்தது.

குழப்பத்தில் மதுமிதா

குழப்பத்தில் மதுமிதா

கடைசியில் மதுவிற்கு சேரனும், வனிதாவும் அறிவுரை செய்தனர். இதனால் மது தீவிர மன அழுத்தத்திற்கு ஆளானார். அவர் பெரும் குழப்பத்தில் இருந்தது அவரது முகத்திலேயே தெரிந்தது. ஆனால், அதற்குப் பின்னர் நடந்த கேப்டனுக்கான போட்டியில் அவர் கலந்து கொண்டு ஜெயித்தார்.

கோல்மால் செய்தாரா?

கோல்மால் செய்தாரா?

அப்போட்டியில் அவர் கோல்மால் செய்து தான் ஜெயித்ததாக நெட்டிசன்கள் ஆதாரத்துடன் கூறி வருகின்றனர். இந்தப் பிரச்சினை பிக் பாஸ் வீட்டிலும் வெடித்திருக்கும் எனத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த மது தற்கொலைக்கு முயன்றதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

புரொமோ வெளியாகவில்லை

புரொமோ வெளியாகவில்லை

மதுவின் தற்கொலைப் பிரச்சினையால் தான் இன்னமும் இன்றைய புரொமோ தாமதமாக வெளியானதாகத் தெரிகிறது. அந்த புரொமோவில் கையில் கட்டுடன் கமல் முன்பு நின்று பேசுகிறார் மது. கமல் அவருக்கு அறிவுரை கூறுகிறார்.

முகென் வனிதா விவகாரம்

முகென் வனிதா விவகாரம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படித்தான் முகென் வனிதாவை அறைந்து விட்டதாக ஒரு தகவல் பரவியது. ஆனால், அது தொடர்பான எந்தக் காட்சிகளும் நிகழ்ச்சியில் இடம் பெறவில்லை. எனவே, மதுமிதா தற்கொலை முயற்சியும் பொய்யாகத்தான் இருக்கும் என மக்கள் கருதினர். ஆனால், கமல் முன்பு அவர் கையில் கட்டுடன் நிற்கும் காட்சிகள் அவர் தற்கொலைக்கு முயற்சித்ததை உறுதி செய்துள்ளன.

மது தற்கொலை முயற்சி

மது தற்கொலை முயற்சி

மதுமிதா ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை. ஒருவேளை கவினுடனான பிரச்சினையால் தான் அவர் தற்கொலைக்கு முயன்றாரா என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும். இப்புரொமோவில் சேரனும் பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

உண்மை தகவலா?

உண்மை தகவலா?

டிவிட்டரில் பலர் இது குறித்துப் பேசி வருகின்றனர். கடந்த வாரம் தான் மதுமிதா இறுதிச் சுற்று வரை செல்வார் என சக போட்டியாளர்கள் தெரிவித்திருந்தனர். கமலும் மதுவைப் பாராட்டி இருந்தார். இந்தச் சூழ்நிலையில் அவர் அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X