பிக் பாஸ் தரப்போகும் அடுத்த ஷாக்.. 2வது வைல்ட்கார்ட் என்ட்ரியாகும் மது.. வனிதாவுக்கு செமகம்பெனி தான்

பிக் பாஸ் வீட்டிற்கு மதுமிதா மீண்டும் அழைத்துவரப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Losliya Double game:உணர்ச்சிகளோடு விளையாடும் லொஸ்லியா

சென்னை: பிக் பாஸ் வீட்டில் அடுத்த வைல்ட் கார்டு என்ட்ரியாக மதுமிதா அழைத்துவரப்பட இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் தற்போது எட்டு போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் வனிதா ஏற்கனவே வீட்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்டு பின்னர் வைல்ட் கார்டு எண்ட்ரியாக மீண்டும் உள்ளே அழைத்து வரப்பட்டுள்ளவர். அவர் தற்போது வீட்டில் ஏகப்பட்ட குட்டி கலாட்டாக்களை செய்து வருகிறார்.

எனவே அவரை வீட்டை விட்டு எப்படியாவது வெளியே அனுப்பிவிட வேண்டும் என மக்களும் சரி, சக போட்டியாளர்களும் சரி முயற்சித்து வருகின்றனர்.

கேப்டன் வனிதா

கேப்டன் வனிதா

ஆனால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக வனிதா இருக்கிறார் எனவே அவரை யாரும் நாமினேட் செய்ய இயலாது. இந்த சூழ்நிலையில் வனிதாவுக்கு கம்பெனி கொடுப்பது போல் மீண்டும் மதுமிதாவை உள்ளே அழைத்து வர பிக் பாஸ் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மது

மது

வனிதாவை போலவே மதுமிதாவும் சண்டைக்கோழி தான். பிரச்சினைகளுக்கு புள்ளி கோலம் போட்டுவிடுவதில் வல்லவர் மது. ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட மோதலில் கையை அறுத்துக் கொண்டதால் தான் அவர் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ஆனால் மக்கள் மத்தியில் மதுவுக்கு ஆதரவு அதிகமாக உள்ளது. மீண்டும் அவரை பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக வலியுறுத்தி வருகின்றனர்.

கண்டெண்ட்

கண்டெண்ட்

எனவே வனிதாவை போலவே மதுவையும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வந்தால் அவரது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும், பிக் பாஸ்க்கு கண்டெண்டும் கிடைக்கும். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்த போது வனிதாவும் மதுவும் நல்ல தோழிகளாக தான் இருந்தனர். அதனால் அவர்கள் கூட்டணி வைத்து சக போட்டியாளர்களை ஒருவழி செய்துவிடுவர் என்பதில் சந்தேகமே இல்லை.

மற்ற போட்டியாளர்கள்

மற்ற போட்டியாளர்கள்

மது விவகாரத்தில் பிரச்சினை ஏற்பட்ட போது அவருக்கு ஆதரவாக சேரனும், கஸ்தூரியும் தான் இருந்துள்ளனர். இவர்களில் கஸ்தூரி வெளியேறிவிட்டார். மீதம் இருப்பது சேரன் மட்டும் தான். அவருக்கு எதிராக எதுவும் செய்யாமல் மற்ற போட்டியாளர்களை மது நிச்சயம் ஒரு கை பார்த்துவிடுவார். இதனால் நிகழ்ச்சியும் விறுவிறுப்பாக செல்லும்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இவற்றின் அடிப்படையில் தான் மதுவை மீண்டும் பிக் பாஸ் அழைத்து வருகிறார் என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. ஆனால், இந்தத் தகவலால் மது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிக் பாஸ் விதி

பிக் பாஸ் விதி

பிக் பாஸை நம்மவே முடியாது. அவருடைய ரூல்ஸ் புத்தகத்தில் இருக்கிறது என எதையாவது காட்டி, நெட்டிசன்கள் கூறுவது போல் மதுவை உள்ளே அழைத்து வந்தாலும் யாரும் கேள்வி கேட்க முடியாது என்பது மட்டும் உறுதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X