கமலின் பிரித்தாளும் சூழ்ச்சி ஒர்க்அவுட் ஆகிடுச்சு.. உடைந்தது பாய்ஸ் கேங்.. கவின்தான் முதல் டார்கெட்!
இந்த வார எவிக்ஷனுக்கு முகென், தர்ஷன், சேரன் ஆகியோர் கவினை நாமினேட் செய்துள்ளனர்.
Recommended Video
சென்னை: கமல் கடந்த இரண்டு தினங்களாக கஷ்டப்பட்டு பேசியது வீண் போகவில்லை. இந்த வாரம் எவிக்ஷன் இல்லை என்பது தெரியாமல், முகென், தர்ஷன், சேரன் ஆகியோர் கவினை நாமினேட் செய்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 64வது நாளுக்கான முதல் புரொமோ வெளியாகியுள்ளது. இதில் வழக்கம் போல் வாரத்தின் முதல் நாளுக்கான நடைமுறைப்படி நாமினேஷன் நடைபெறுகிறது. அதில் முகென், தர்ஷன், சேரன் ஆகியோர் கவினை நாமினேட் செய்கின்றனர்.
கவினை நாமினேட் செய்ய அவர்கள் கூறும் காரணம் லாஸ்லியா உடனான அவரது பழக்கம். அபி பிரச்சினையில் தனக்கு அட்வைஸ் செய்த கவின், தற்போது லாஸ்லியாவுடன் அதே தவறை செய்வதாக முகென் கூறுகிறார்.

மைக் விவகாரம்
கவினை நாமினேட் செய்ய தர்ஷன் கையில் எடுத்திருப்பது மைக்கை ஆஃப் செய்த விவகாரம். கவின் மைக்கை ஆஃப் செய்தது மட்டுமின்றி லாஸ்லியாவையும் அப்படி செய்ய சொன்னது தவறு என்கிறார் தர்ஷன். லாஸ்லியாவை தனது சகோதரி எனக் கூறி வருகிறார் தர்ஷன். எனவே, அவரது பெயரும் இந்த விவகாரத்தில் டேமேஜ் ஆகி விட்டதே என்ற கவலை அவருக்கு.

லாஸ்லியா
சேரனும் கவினையே நாமினேட் செய்துள்ளார். வழக்கம் போல் தனது மகளின் எதிர்காலம் கருதி இந்த முடிவை எடுப்பது போல் அவர் பேசுகிறார். கவினின் கவனம் லாஸ்லியா மீது அதிகமாக இருப்பதே சேரன் நாமினேட் செய்வதற்கு முக்கிய காரணமாகும்.

எவிக்சன் கிடையாது
இவர்கள் அனைவரும் கவினை நாமினேட் செய்தாலும் எந்த பயனும் இல்லை. ஏனெனில் இந்த வாரம் எவிக்ஷன் கிடையாது என கமல் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இது தெரியாமல் ஹவுஸ்மேட்ஸ் கவினை நாமினேட் செய்துள்ளனர். எனவே இந்த வாரம் கவின் வெளியே போகப் போவதில்லை என்பது உறுதி.

பாய்ஸ் கேங்
இருப்பினும் இந்த நாமினேஷன் மூலம் பிக் பாஸ் வீட்டில் வலுவாக இருக்கும் பாய்ஸ் கேங்கில் பிரிவு ஏற்பட்டிருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. சாண்டி, கவின், முகென், தர்ஷன், லாஸ்லியா ஆகியோர் அடங்கிய இந்த கேங் கடந்த இருவாரங்களாக செமையாக கலக்கியது. வனிதாவால் கூட இவர்களது ஒற்றுமையை பிரிக்க முடியவில்லை.

கமலின் பிரித்தாளும் சூழ்ச்சி
ஆனால் கமல் நேற்று ஒவ்வொருவரையும் தனியே அழைத்து பேசி பிரித்தாளும் சூழ்ச்சியை நயமாக கையாண்டார். இதனால் தங்களுடைய ஸ்டாடர்ஜியை மாற்ற வேண்டும் எனும் எண்ணம் அனைத்து ஹவுஸ்மேட்சிடமும் வந்துவிட்டது. இனி பிக் பாஸ் வீட்டிற்குள் குழு விளையாட்டு இருக்காது என்பதை இன்றைய முதல் புரொமோவே புரியவைத்துவிட்டது.

சூடு பிடிக்கும் களம்
பிக் பாஸ் வகுத்துள்ள ஸ்டாடர்ஜி படி, இனி ஹவுஸ்மேட்ஸ் இடையே குடுமிப்பிடி சண்டை நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இப்போது பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அனைவருமே முக்கியமான போட்டியாளர்கள். நிச்சயம் தங்களது இருப்பைக் காட்ட அவர்கள் களத்தில் இறங்கி விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











