பிக் பாஸ் பார்த்து விட்டு கதறி அழுத முகென் அப்பா..பாடாய் படுத்தும் அபியை திட்டித் தீர்க்கும் அம்மா!

பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு முகெனின் அப்பா கதறி அழுததாக, அவரது தம்பி கூறியுள்ளார்.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு முகெனின் அப்பா அழுதே விட்டாராம். அபியால் தான் முகெனுக்கு இவ்வளவு பிரச்சினையும் என முகெனின் அம்மா திட்டி வருகிறாராம்.

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே சமத்துப்பிள்ளையாக வலம் வருபவர் முகென். சிறுவயதில் தன் பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் தான் அனுபவித்த துன்பங்களைப் பற்றி கூறியும், அதிலிருந்து தான் மீண்டு வந்தது பற்றியும் ஆரம்பத்தில் ஒரு நாள் அவர் பேசினார். அதோடு தான் எப்போதும் அன்புக்காக ஏங்குபவன் என்றும் கூறி, தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

ஆனால், கடந்த சில வாரங்களாக பிக் பாஸ் வீட்டில் அவர் தொடர்ந்து பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார்.

அபிராமியின் காதல்:

அபிராமியின் காதல்:

காதல் என்ற பெயரில் முகெனை அவர் தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகிறார். அபிராமியுடனான சண்டையால் கடந்த வாரம் அவர் கட்டிலை உடைத்தார். நேற்றும் அவர் சேரைத் தூக்கி அடிக்கும் அளவிற்கு ஆவேசமானார். தொடர்ந்து அபிராமி அவரது உணர்ச்சிகளோடு விளையாடி வருகிறார். ஏதாவது செய்து அவரைக் கோபப்படுத்தி விடுகிறார்.

கமல் அறிவுரை:

கமல் அறிவுரை:

கமல் கூட இது தொடர்பாக கடந்த வாரம் அபிராமிக்கு அறிவுரை கூறினார். ஆனாலும் அவர் மாறுவதாய் இல்லை. கமல் பேசியதை வைத்தே நேற்று புதுப்பிரச்சினையை உருவாக்கினார். வனிதாவும் எரிகிற தீயில் எண்ணெய் விட்டு, அபியை இன்னமும் சூடேற்றினார். இதனால் முகென் மனம் வருந்தி அழுதார்.

வேதனை:

வேதனை:

இந்நிலையில் முகெனின் தம்பி விக்னேஷ் அளித்துள்ள பேட்டியொன்றில், முகெனைப் பார்த்து அவரது குடும்பத்தார் மிகவும் மனம் வருந்துவதாகத் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு அவரது அப்பா மிகவும் வேதனைப்பட்டாராம். குடும்ப விசயங்களை எல்லாம் ஏன் இப்படி டிவியில் கூறுகிறான் என அவர் அழுதாராம்.

அபியைத் திட்டும் அம்மா:

அபியைத் திட்டும் அம்மா:

அதோடு முகென் படும் வேதனைகளைப் பார்த்தும் அவர் கதறி அழுததாக விக்னேஷ் கூறியுள்ளார். அபியின் நடவடிக்கைகளைப் பார்த்து, அவரது அம்மா தினமும் திட்டிக் கொண்டே இருப்பார் எனவும் முகெனின் தம்பி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியைப் பார்க்கிற நமக்கே அவ்வளவு கோபம் வருகிற போது, அவர்களது குடும்பத்தார் சும்மா இருப்பார்களா என்ன?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X