'அன்பு எப்போதுமே அனாதைதான்’.. அபியிடம் தேம்பித்தேம்பி அழுத முகென்.. திரும்பவும் முதல்ல இருந்தா?

அபியிடம் முகென் அழுவது போன்ற காட்சிகள் புரொமோவில் உள்ளது.

சென்னை: அபிராமியிடம் முகென் தேம்பி அழுவது போன்ற புரொமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்துள்ள வனிதா, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார். அவர் பற்றவைத்த நெருப்பு, தற்போது கொழுந்துவிட்டு எரிய தொடங்கியிருக்கிறது.

இருதினங்களுக்கு முன்பு அபிராமியும், முகெனும் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் அளவுக்கு சண்டை போட்டனர். இதனால் பிக் பாஸ் வீடே கலவர பூமியானது.

மது சண்டை:

மது சண்டை:

நேற்றைய தினம் மதுவை நைசாக தூண்டிவிட்டார் வனிதா. பிக் பாஸ் வீட்டில் உள்ள ஆண்கள் எல்லாம் பெண்களை பயன்படுத்திக்கொள்வதாக, கவின் உள்ளிட்டோருடன் மது சண்டைக்கு போனார். இதனால் மீண்டும் களேபரமானது பிக் பாஸ் வீடு.

லாஸ்லியா கோபம்:

லாஸ்லியா கோபம்:

இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் தர்ஷனை வம்புக்கு இழுக்கிறார் வனிதா. நேற்று போல் இன்றும் கடுப்பான லாஸ்லியா, வனிதா லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார். இதை பார்த்ததும் இன்றைய எபிசோடும் ரணகளமாக தான் இருக்கப் போகிறது என தோன்றியது.

மீண்டும் அபி:

மீண்டும் அபி:

ஆனால் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரொமோவில், இந்த காட்சிகள் அப்படியே மாறியிருக்கின்றன. சிறைச்சாலை வாசலில் அபியும், முகெனும் அமர்ந்து பேசுகின்றனர். அப்போது, தான் எந்த பெண்ணையும் தனது சுயநலத்துக்காக பயன்படுத்திக்கொள்ளவில்லை எனக் கூறி தேம்பி தேம்பி அழுகிறார் முகென்.

நல்லவர்:

நல்லவர்:

இந்த காட்சிகளை பார்க்கும் போது முகெனின் உண்மையான குணத்தை புரிந்துகொள்ள முடிகிறது. முகென் ஒரு முன்கோபி தான். ஆனால் மிகவும் நல்லவர். இதுநாள் வரை தான் உண்டு தனது வேலை உண்டு என்று தான் செயல்பட்டு வருகிறார். ஆனால் அவரது கோபத்தை தூண்டிவிடும் செயல்களை வனிதா உள்ளிட்டோர் வேண்டுமென்றே செய்து வருகின்றனர்.

முகெனுக்கு இல்லை:

முகெனுக்கு இல்லை:

கடந்த வாரம் முடிசூட்டு விழா ஒன்றை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் நடத்தினார். அப்போது நல்லது, கெட்டது என இரண்டு விதமான கிரீடங்கள் தரப்பட்டன. ஒருவர் கூட முகெனுக்கு அந்த கிரீடத்தை வைக்கவில்லை. அப்போது கமல் முகெனை பார்த்து, உங்களுக்கு ஏன் ஒருவர் கூட முடிசூட்டவில்லை என கேட்டார்.

ஏக்கம்:

ஏக்கம்:

அதற்கு பதிலளித்த முகென், அன்பு எப்போதுமே அநாதை தான் என பதிலளித்தார். ஆம், அவர் அன்று சொன்னது உண்மைதான், முகெனை பொறுத்த வரை அன்பு எப்போதும் அநாதை தான். அவர் அன்புக்காக ஏங்கி இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு மற்றவர்கள் விளையாடி விடுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X