டிக்கெட் டு பினாலே இந்த ‘கருப்புக்குதிரை’க்குத் தான்.. மேஜிக் செய்யப் போகும் ‘தங்கமுட்டை’ !

டிக்கெட் டு பினாலே போட்டியில் இதுவரை 36 புள்ளிகள் பெற்று முகென் முதலிடத்தில் இருக்கிறார்.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : Sandy and losliya fight

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடந்து வரும் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கின் வெற்றியாளர் யார் என்பது தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் யார் அதிக மதிப்பெண் பெறுகிறார்களே அவர்களே நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவர்.

இந்த டாஸ்க்கில் ஒவ்வொரு போட்டியாக வைக்கப்பட்டு வருகிறது. இதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து போட்டியாளர்களும் போட்டி போட்டு வருகிறார்கள்.

கடைசி இடம்

கடைசி இடம்

ஒவ்வொரு போட்டியிலும் போட்டியாளர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து போட்டிகளின் கூட்டுத் தொகையை வைத்தே தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 18 புள்ளிகள் மட்டுமே ஸ்கோர் செய்து கடைசி இடத்தில் இருக்கிறார் கவின்.

லாஸ்லியாவின் இடம்

லாஸ்லியாவின் இடம்

கவினுக்கு முந்தைய இடத்தில் இருக்கிறார் லாஸ்லியா. இதுவரை அவர் 23 புள்ளிகள் மட்டுமே எடுத்துள்ளார். பிசிக்கல் டாஸ்க்குகளே அதிகமாக வைக்கப்படுவதால் லாஸ்லியாவால் பெரிதாக ஸ்கோர் செய்ய முடியவில்லை. இதனால் அவர் 6வது இடத்தில் இருக்கிறார்.

5வது இடத்தில் சேரன்

5வது இடத்தில் சேரன்

டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் தன்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்து முட்டி மோதுகிறார் சேரன். கூட விளையாடும் அனைவரும் இளைஞர்கள் என்பதால் அவரால் பெரிதாக ஸ்கோர் செய்ய முடியவில்லை. 27 புள்ளிகளுடன் அவர் 5வது இடத்தில் இருந்து வருகிறார்.

4வதுஇடத்தில் 2 பேர்

4வதுஇடத்தில் 2 பேர்

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் தர்ஷன் தான். இப்போதும் கூட அவர் தான் டைட்டில் வின்னர் என பேசப்படுகிறது. ஆனால் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் தர்ஷன் சரியாக விளையாடவில்லை. இதனால் அவர் 30 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறார். ஷெரினும் அதே புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறார்.

2வது இடத்தில் சாண்டி

2வது இடத்தில் சாண்டி

பிக் பாஸ் சீசன் 3ல் அனைவராலும் ரசிக்கப்படும் ஒரு போட்டியாளர் என்றால் அது சாண்டி மாஸ்டர் தான். டாஸ்க்குகளை பொறுத்தவரை எப்போதுமே ஆக்ரோஷமாக விளையாடி வருகிறார். இதனால் 32 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் இருக்கிறார் சாண்டி.

முதலிடத்தில் முகென்

முதலிடத்தில் முகென்

புள்ளிகளின் அடிப்படையில் பார்த்தால் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கின் வின்னர் நிச்சயம் முகென் தான். இதுவரை 36 புள்ளிகள் ஸ்கோர் செய்து முதலிடத்தில் இருக்கிறார். எல்லா டாஸ்க்குகளையும் சிறப்பாக விளையாடி வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் போட்டியாளர்களில் மிகவும் நேர்மையாக, நியாயமாகவும், உண்மையாகவும் இருப்பது முகென் தான் என்பது ரசிகர்களின் கருத்து எனவே அவர் தான் இப்போட்டியில் ஜெயித்து பைனலுக்கு போக வேண்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பம்.

தங்கமுட்டை மேஜிக்

தங்கமுட்டை மேஜிக்

தற்போது தங்கமுட்டை டாஸ்க் மதிப்பெண்கள் மட்டும் தான் அறிவிக்கப்படவில்லை. ஆனால், இதில் ஏற்கனவே, சாண்டி, ஷெரின் மற்றும் சேரன் ஆகியோர் வெளியேறி விட்டனர். எனவே அவர்களுக்கு இந்த டாஸ்க்கில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கப் போவதில்லை. இதை வைத்துப் பார்க்கும் போது முகெனுக்குத் தான் நேரடியாக பைனலுக்குச் செல்வதற்கான டிக்கெட் கிடைக்கும் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X