“கட்டி பிடிச்சு உருண்டியே”.. அபியை கேவலமாக பேசிய வனிதா.. தர்ஷன் சொல்லியும் கண்ணியம் தவறாத முகென்!

அபியுடனான சண்டையின் போது தர்ஷன் வற்புறுத்தியும் சில உண்மைகளைக் கூற மறுத்து விட்டார் முகென்.

சென்னை: நிச்சயம் முகென் பல விசயங்களை மறைத்து அபியின் கௌரவத்தை காப்பாற்றி இருக்கிறார் என்பது தர்ஷன் பேச்சு மூலம் தெரிகிறது.

நேற்றைய அபி - முகென் சண்டைக்கு காரணம் வனிதா என்பதை பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் சிறுகுழந்தைகூட சொல்லி விடும். அந்தளவிற்கு குழந்தையையும் கிள்ளி விட்டுவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் வேலையை சாமர்த்தியமாகப் பார்த்தார் வனிதா.

தேவையே இல்லாமல் வெளியில் பார்த்தவற்றை பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி அவர்களைக் குழப்பினார்.

எடுப்பார் வைப்பிள்ளை

எடுப்பார் வைப்பிள்ளை

எடுப்பார் கைப்பிள்ளையான அபி தான் அவரது முதல் டார்க்கெட். வெளியில் இருந்த போதே, அபி தொடர்பான மீம்ஸ்களைத் தான் அவர் அதிகம் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்தார். அபியைப் பற்றிய விமர்சனமும் தவறானதாகத் தான் இருந்தது. இப்படி இருக்கையில் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் போனதும் அபி மீது அதிக அக்கறைக் கொண்டவராக தன்னைக் காட்டிக் கொண்டார் வனிதா.

கோபமூட்டிய வனிதா

கோபமூட்டிய வனிதா

முகெனைப் பற்றி ஏதேதோ சொன்னார். அபியை வைத்து முகென் ஹீரோவாகி விட்டதாகவும், அபி ஜீரோவாகி விட்டதாகவும் அவர் ஏற்றி விட்டார். ஏற்கனவே கமல் அறிவுரையால் குழப்பத்தில் இருந்த அபியை வனிதாவின் இந்த வார்த்தைகள் மேலும் காயப்படுத்தின. தன் கோபத்தை எல்லாம் சக போட்டியாளர்கள் முன்னிலையில் முகெனிடம் அவர் வெளிப்படுத்தினார்.

பொய் சொன்ன வனிதா

பொய் சொன்ன வனிதா

இந்த பிரச்சினையின் போது, 'நீ முகெனைக் கட்டிப் பிடிச்சு உருண்டியே..' என அசிங்கமாகப் பேசினார் வனிதா. நிகழ்ச்சியில் பெரும்பாலும் அப்படியான காட்சிகள் காட்டப்படவில்லை. ஆனால் அதனை மக்கள் அனைவரும் பார்த்ததாக வனிதா அபியிடம் கூறினார். இதனால் தான் தன்னைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள் என்ற கோபம் அபிக்கு ஏற்பட்டது.

எல்லாத்தையும் சொல்லிடுடா

எல்லாத்தையும் சொல்லிடுடா

இதேபோல், சண்டையின் போது, ‘எல்லாத்தையும் சொல்லிடுடா..' என அடிக்கடி தர்ஷன் முகெனிடம் சொல்லிக் கொண்டே இருந்தார். அப்படியென்றால், அபி முகெனிடம் தப்பாக நடக்க முயற்சித்தாரா? அதைத் தான் சொல்லும்படி தர்ஷன் கட்டாயப்படுத்தினாரா எனத் தெரியவில்லை. ஆனால், அபியின் பெயரைக் கெடுக்க விரும்பாத முகென், கடைசி வரை கண்ணியம் காத்தார்.

முகெனின் கண்ணியம்

முகெனின் கண்ணியம்

தர்ஷன் சொன்னது போல், அபி பற்றிய ரகசியம் ஏதாவது இருந்து, அதை முகென் அனைவர் முன்னிலையிலும் சொல்லி இருந்தால், நிச்சயம் அபி தான் தவறு செய்தார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், அநாவசியமாக ஒரு பெண்ணின் பெயருக்கு களங்கம் கற்பிக்க விரும்பாத முகெனை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X