மீண்டும் சிறப்பு விருந்தினர்கள்.. டிஆர்பிக்காக பிக் பாஸ் அதிரடி.. விஷபாட்டில் வேலையைக் காட்டுமா?
பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஜனனியும், ரித்விகாவும் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: கடந்த சீசன் டைட்டில் வின்னரான ரித்விகாவும், கோல்டன் டிக்கெட் வென்ற ஜனனியும் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 3 இன்னும் இரு வாரங்களில் முடிவடைய இருக்கிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் ஆறு போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் முகென் ஏற்கனவே நேரடியாக பைனலுக்குச் செல்லும் கோல்டன் டிக்கெட்டை பெற்று விட்டார். எனவே, மீதமுள்ள ஐந்து போட்டியாளர்களிடையே தான் யார் பைனலுக்குச் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் டிக்கெட் டு பினாலேவுக்காக கடினமான போட்டிகள் பிக் பாஸ் வீட்டில் நடத்தப்பட்டன. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்குவதால் போட்டிகள் இன்னமும் கடுமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரித்விகா
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு கடந்த சீசனைச் சேர்ந்த இரண்டு போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக செல்வது தெரிய வந்துள்ளது. கடந்த சீசன் டைட்டில் வின்னரான ரித்விகாவும், கோல்டன் டிக்கெட் வென்ற ஜனனியும் தான் அந்த போட்டியாளர்கள் எனக் கூறப்படுகிறது. இது நாளைய எபிசோடில் ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது.

விஷ பாட்டில் ஜனனி
கடந்த சீசனிலுமே கூட முதல் சீசன் போட்டியாளர்களான ஆரவ், ரைசா மற்றும் ஹரீஷ் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக உள்ளே சென்றனர். போன சீசனில் விஷ பாட்டில் எனப் பேர் வாங்கியவர் ஜனனி. எனவே தற்போது உள்ளே போய் அவரை வைத்து பிக் பாஸ் ஏதும் கண்டெண்ட்டுக்கு திட்டம் வைத்துள்ளாரா எனத் தெரியவில்லை.

நடுவர்கள்
பெரும்பாலும் இவர்கள் இருவரும் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுத்து அதற்கு நடுவர்களாக இருப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பிக் பாஸ் வீட்டில் தற்போது நான்கு ஆண் போட்டியாளர்கள் உள்ள நிலையில், இரண்டு பெண் போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே உள்ளனர்.

யாஷிகா
லாஸ்லியா, ஷெரின் என அவர்கள் இருவருக்குள்ளுமே நல்ல நட்பு எதுவும் இல்லை. எனவே, அவர்களுக்கு கம்பெனி கொடுக்கும் வகையில் ரித்விகாவும், ஜனனியும் உள்ளே சென்றுள்ளனர் எனத் தெரிகிறது. இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டு வரும் நெட்டிசன்கள் ரித்விகா, ஜனனிக்கு பதில் ஐஸ் மற்றும் யாஷிகாவை அனுப்பும்படி கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











