எதிர்பாராத டிவிஸ்ட்.. கெஸ்ட்டாக பிக் பாஸுக்கு வந்த சாக்ஷி.. பாவம் கவின் இனி தினம்தினம் தீபாவளிதான்
பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக சென்றிருக்கிறார் சாக்ஷி.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் சாக்ஷி மீண்டும் சிறப்பு விருந்தினராக சென்றிருக்கிறார். அவருடன் மோகன் வைத்யா மற்றும் அபிராமியும் உள்ளே சென்றுள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் கவினை வம்பிற்கு இழுப்பவர்கள் எல்லோருமே சாக்ஷி விவகாரத்தைத் தான் கையில் எடுக்கிறார்கள். நேற்றைய சண்டையின் போது கூட வனிதா, சாக்ஷிக்காகத்தான் கவினிடம் சண்டை போட்டார்.
கவினை வெளியே போகச் சொல்லி விட்டு, மீண்டும் சாக்ஷியை உள்ளே அழைத்து வர வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக இருந்தது.

செல்லக்குட்டி
இந்த சீசனின் பிக் பாஸ் செல்லக்குட்டியாக வனிதா தான் இருக்கிறார். சமயங்களில் வனிதா தான் பிக் பாஸோ என்ற சந்தேகமே பார்வையாளர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்தளவிற்கு நினைத்தால் மைக்கை கழற்றி வீசுகிறார், போராட்டம் நடத்துகிறார். ஆனால் அவரை பிக் பாஸ் தட்டிக் கேட்பதே இல்லை.

ஆசை
மக்கள் வாக்களித்து வெளியில் அனுப்பிய அவரை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளார். சிறப்பு விருந்தினராக வந்த அவர் தற்போது வைல்ட் கார்ட் எண்ட்ரியாகி விட்டார். அப்படி இருக்கையில் அவர் ஆசைப்பட்டு கேட்டதை பிக் பாஸ் செய்யாமல் விட்டு விடுவாரா.

மீண்டும் சாக்ஷி
ஆம், வனிதா எதிர்பார்த்தபடியே சாக்ஷியை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளார் பிக் பாஸ். இன்று அவர் உள்ளே சென்றிருப்பது இரண்டாவது புரொமோ மூலம் உறுதியாகியுள்ளது. சாக்ஷியுடன் அபிராமி மற்றும் சாண்டி அண்ட் கோ விரும்பிக் கேட்டபடி மோகன் வைத்யாவும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

கவினுக்கு ஆப்பு
தற்போதைய சூழ்நிலைப்படி பிக்பாஸ் வீட்டில் கவின் - லாஸ்லியா காதல் மட்டுமே பேசு பொருளாக உள்ளது. இந்த சூழ்நிலையில், கவினுடன் முன்பு காதலில் இருந்த முன்னாள் போட்டியாளரான சாக்ஷி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விருந்தினர்கள் ஒருவார காலம் பிக் பாஸ் வீட்டில் தங்கி இருப்பார்களாம்.

கொலைவெறி
சாக்ஷி பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை தன்னை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறியவில்லை. ஆனால், வெளியில் சென்று பார்த்த பிறகு தான், தன்னை வில்லி ரேஞ்சுக்கு கவின் - லாஸ்லியா ஆக்கியிருக்கின்றனர் என்பதை புரிந்து கொண்டார். இதனால் அவர்கள் இருவர் மீதும் கொலைவெறியில் அவர் இருக்கிறார்.

புதிய பிரச்சினைகள்
கடந்த வாரம் சாக்ஷி தன்னை வைத்து கேம் விளையாடியதாக கவின் கூறிய எபிசோட்டைப் பார்த்து விட்டு, அதை மறுத்து கோபமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் சாக்ஷி. அதனால் சாக்ஷி உள்ளே சென்றிருப்பதால் கவின் - சாக்ஷி இடையே புதிய பல பிரச்சினைகள் உருவாகும் என்பதில் சந்தேகமேயில்லை.

தினம் தினம் தீபாவளி
பாவம் கவின், ஏற்கனவே வனிதாவால் பல பிரச்சினைகளில் சிக்கி வருகிறார். இதில் புதிய வரவாக சாக்ஷியும் சென்றிருப்பதால் அவருக்கு தினம் தினம் தீபாவளி தான். எப்படியும் இந்த வாரம் கவினை வெளியேற்றாமல் வனிதா விட மாட்டார் என்பது அவரது நடவடிக்கைகளைப் பார்க்கும் போதே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











