இதென்ன புது சோதனை..சேரனை பைத்தியம் ஆக்காம சாண்டி விடமாட்டாரோ..முகென் பாவம் சிரித்தே செத்துருவாரு போல

பிக் பாஸ் வீட்டில் சூப்பர் ஹீரோக்கள் கதைகளாகச் சொல்லி, சேரனை அசத்தி வருகிறார் சாண்டி.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 88 : Ticket to finale : வெளிவந்த ஷெரின் உண்மை முகம்

சென்னை: பிக் பாஸ் வீட்டில் கடந்த சில தினங்களாக சூப்பர் ஹீரோக்கள் கதைகளாகச் சொல்லி, சேரனை அசத்தி வருகிறார் சாண்டி.

கடந்த வாரம் கமல் கூறியது போல, குழந்தைகளின் பேவரைட் போட்டியாளராகி வருகிறார் சாண்டி. ஏற்கனவே, தனது கலகலப்பான பேச்சால் பிக் பாஸ் வீட்டையே மகிழ்ச்சியாக வைத்திருப்பவர் சாண்டி தான். சமயங்களில் அவரது பேச்சால் மற்ற போட்டியாளர்கள் கோபப்பட்டாலும், அந்த கோபம் நீண்ட நேரம் நீடிக்காமல் உடனே சமாதானப் படுத்தி விடுவார் சாண்டி.

சாண்டி இல்லாத பிக் பாஸ் சீசன் 3 வீட்டை நினைத்துப் பார்க்கவே முடியாது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்தளவிற்கு நிகழ்ச்சி கலகலப்பாக செல்ல சாண்டியின் பங்கு முக்கியமானது.

சூப்பர் ஹீரோ கதைகள்

சூப்பர் ஹீரோ கதைகள்

எப்போதும் தனது டைமிங் காமெடியால் கலக்கி வரும் சாண்டி, கடந்த சில நாட்களாக சில சூப்பர் ஹீரோ கதைகளையும் சொல்லத் தொடங்கியுள்ளார். அவரது கதைகளுக்கு எப்போதுமே முகெனும், சேரனும் தான் ரசிகர்கள். அதிலும் குறிப்பாக சாண்டி சொல்லச் சொல்ல வில்லுப்பாட்டு மாதிரி சேரன் அவருக்கு பதில் கூறுவார்.

முகென்

முகென்

நிஜத்தில் நடக்க முடியாத, நம்ப முடியாத கதைகளைத் தான் பெரும்பாலும் சாண்டி கூறுவார். ஆனால், முகத்தில் கொஞ்சமும் உணர்ச்சிகளைக் காட்டாமல் அவர் கதை சொல்லும் விதத்தை நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். பாவம் பக்கத்தில் அமர்ந்திருக்கும் முகென் தான் சிரித்தே செத்து விடுவார் போல.

ஷாக்கான சேரன்

ஷாக்கான சேரன்

குச்சியால் யானையைத் தூக்கி போடுவது, நிலாவை கையால் பிடித்து விளையாடுவது என சாண்டி சொல்வது எல்லாமே வேற லெவல் கதைகள் தான். அதிலும் நேற்று கூறிய கதையில் சாண்டி வைத்த திடீர் டிவிஸ்டை சேரனே எதிர்பார்க்கவில்லை என்பது தான் ஹைலைட். சாண்டிக்குள் இருந்த கற்பனை வளத்தைப் பார்த்து அவர் அசந்து போய் விட்டார்.

பாட்டி

பாட்டி

அதாவது நேற்று சாண்டி சொன்ன கதையில், ஒரு பையன் மாவு அரைத்துக் கொண்டு வந்து கொண்டிருக்கும் போது, திடீரென மழை வந்து விடுகிறது. அப்போது கதையின் நாயகியான சூப்பர் ஹீரோ பாட்டி, ஒரு குச்சியை எடுத்து வந்து மேகத்தை கலைத்து விட்டுச் செல்கிறாள். இதனால் மழை வராமல் கலைந்து விடுகிறது.

பயந்து வருதே சாண்டி

பயந்து வருதே சாண்டி

சாண்டியின் இந்த கற்பனை கேட்பதற்கு நன்றாகத் தான் இருந்தது. ஆனால், அதனை சேரன் கூர்ந்து கவனித்ததைப் பார்க்கும் போது தான், ‘அயய்யோ நல்ல இயக்குநரை இப்டி மொக்கை கதையா சொல்லி, சாண்டி பைத்தியமாக்கிடுவாரோ' என்ற பயம் நமக்கு வந்து விட்டது. ஆனாலும், வடிவேலு ஒரு படத்தில் கதை கதையாய் அள்ளி விடுவாரே அதையே சாண்டியும் நமக்கு ஞாபகம் தான் வந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X