கட்டப்பாவாக மாறிய சாண்டி.. எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய வனிதா.. கதறி அழும் கவின்.. முற்றும் மோதல்!

இந்த வார எவிக்ஷனுக்கு கவின் மற்றும் லாஸ்லியாவை நாமினேட் செய்துள்ளார் சாண்டி.

Recommended Video

Bigg Boss 3 Tamil: Promo1:Day71:Cheran-னை வெளியேற்றும் Kavin

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் முதல் முறையாக கவினை நாமினேட் செய்துள்ளார் சாண்டி.

பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்துவிட்டது. இப்போது வீட்டிற்குள் இருக்கும் எட்டு போட்டியாளர்களுமே மிக முக்கியமானவர்கள். இதனால் ஒவ்வொருவருக்கும் இடையே போட்டி அதிகமாகியுள்ளது.

இன்று காலை வெளியான முதல் புரொமோவில் போட்டியாளர்களுக்கு மீண்டும் ஓப்பன் நாமினேஷன் நடத்தப்பட்டது. அதில் கவின் சேரனை நாமினேட் செய்யும் காட்சிகள் காட்டப்பட்டது.

ஓபன் நாமினேஷன்

ஓபன் நாமினேஷன்

சேரனை நாமினேட் செய்ய கவின் சொன்ன காரணத்தை ஏற்க மறுக்கிறார் வனிதா. இதனால் வாக்குவாதம் உருவாகி, சேரனை கவின் 'அவரை எனக்கு பிடிக்கவில்லை. அதனால் நாமினேட் செய்கிறேன்' என்று நேரடியாக சொல்லும் அளவுக்கு போனது.

முதல்முறை

முதல்முறை

இந்நிலையில் தற்போது இரண்டாவது புரொமோ வெளியாகியுள்ளது. அதில் கவினை நாமினேட் செய்கிறார் சாண்டி. இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாக பழகி வரும் நிலையில், சாண்டி இப்படி செய்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. மேலும், லாஸ்லியாவையும் சாண்டி நாமினேட் செய்துள்ளார்.

அழுகும் சாண்டி

அழுகும் சாண்டி

சாண்டியின் நாமினேசனால் கவின் தேம்பித் தேம்பி அழுகிறார். வழக்கம் போல் அதையும் விமர்சனம் செய்கிறார் வனிதா. அப்போது சாண்டிக்கும், வனிதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. 'நான் நானாக இருக்கிறேன். நீ நீயாக இரு' என வனிதாவை பார்த்து கூறுகிறார் சாண்டி.

ரசிகர்கள் ஆதங்கம்

இந்த புரொமோவை பார்த்த ரசிகர்கள், "என்ன சாண்டி இப்டி பண்ணிட்ட. நீக்கூட அவன புரிஞ்சுக்கலல", என ஆதங்கப்பட்டுள்ளனர். ஒரு உண்மை நண்பனாக சாண்டி இவ்வாறு நடந்து கொண்டதாக சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.

திட்டுவாங்கும் வனிதா

சைட் கேப்பில் ரசிகர்கள் பலர் வனிதாவையும் திட்டி வருகிறார்கள். "அவ ஏன் இப்டி எல்லாத்துக்கும் கருத்து சொல்லிட்டு இருக்காங்க.. ஒரு வாரம்தானே கேப்டன். ஏன் இப்டி டார்ச்சர் பண்றா. கடுப்ப கெளப்புறா", என காட்டமாக திட்டியுள்ளார் இவர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X