கதவைத் திறந்து வைத்துக் கொண்டே 'சூச்சூ’ போன சாண்டி.. முகம் சுளித்த ஷெரின்.. கோபமாக திட்டிய சேரன்
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டில் பாத்ரூம் கதவை திறந்து வைத்தப்படி சாண்டி சிறுநீர் கழித்த காட்சிகள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் ஜெயிக்கும் போட்டியாளர் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு போய்விடுவார். இதனால் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் போட்டியாளர்கள் அனைவரும் செயல்பட்டு வருகின்றனர்.
டிக்கெட் டு பினாலே டாஸ்க்கை பொறுத்தவரை, அவ்வளவு எளிதில் இதில் யாரும் ஜெயித்துவிடக் கூடாது என்பதற்காக மிக கடுமையான போட்டிகளையே கொடுக்கிறார் பிக் பாஸ். பிசிக்கல் மற்றும் மெண்ட் டாஸ்க்குகள் அதிகளவில் கொடுக்கப்படுவதால் ஹவுஸ்மேட்ஸ் நுரைதள்ளிப் போகின்றனர்.

நள்ளிரவில் எழுப்பிய பிக் பாஸ்
நேற்றைய எபிசோடில் நள்ளிரவு ஒரு மணி அளவில், நன்றாக உறங்கிக்கொண்டிருந்த ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் லைட்டைப் போட்டு எழுப்பிவிட்டார் பிக் பாஸ். கார்டன் ஏரியாவில் ஆளுக்கு ஒரு தங்கமுட்டையை வைத்து, அதனை பத்திரமாக பார்த்து கொள்பவர்களே வெற்றியாளர் என அறிவித்துவிட்டார்.

தங்க முட்டை டாஸ்க்
இதனால் எங்கும் நகர முடியாமல், உடல் உபாதைகளை எல்லாம் பொறுத்துக்கொண்டு தங்களுடைய தங்க முட்டை முன்பு ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அமர்ந்திருந்தனர். போட்டியின் விதிப்படி தங்களின் முட்டையை பாதுகாக்கும் அதே சமயம், மற்றவர்களின் முட்டைகளை உடைக்க வேண்டும். ஆனால் முட்டையின் சொந்தக்காரர், உடைப்படும் போது பார்த்து விட்டால், உடைத்தவர் அவுட்டாகிவிடுவார்.

சிறுநீர் கழித்த சாண்டி
எனவே போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய முட்டையை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்தனர். அந்த நேரத்தில் சாண்டிக்கு அவசரமாக சிறுநீர் வந்துவிட்டது. இதனால் அவர் பாத்ரூமுக்குள் சென்று, கதவை திறந்து வைத்தப்படியே பாதி உடலை மட்டும் உள்ளே செலுத்தி சிறுநீர் கழித்தார்.

முகம் சுளித்த ஷெரின்
சாண்டியின் இந்த செயலை பார்த்து ஷெரின் முகம் சுளித்தார். அவர் மட்டுமல்ல பார்வையாளும் முகம் சுளிக்கும் படியாக தான் இருந்தது. சிறிது நேரம் கழித்து, மலம் கழிப்பதற்கு சாண்டி அதே போல் செய்ய முயன்றார். அப்போது சேரன் குறுக்கிட்டு அதை தடுத்துவிட்டார்.

வெளியேறினார்
இந்த டாஸ்க் விடிந்த பின்னரும் தொடர்ந்தது. தனது உடல் உபாதைகளை பொறுக்க முடியாத சாண்டி, ஷெரின் முட்டையை உடைக்க முயன்று மாட்டிக்கொண்டார். பிறகு அவர் டாஸ்க்கில் இருந்து வெளியேறினார். சாண்டியின் இந்த செயல் மற்றும் அவரது பேச்சு குடலை குமட்ட வைத்தது.


Click it and Unblock the Notifications











