பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அந்த போட்டியாளர்... பைனலுக்குள் நுழைந்த 4 பேர்.. விவரம் இதோ!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் எனும் விவரம் தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த வாரம் பைனல்ஸ் நடக்க உள்ளது. சாண்டி, தர்ஷன், முகென், லாஸ்லியா, ஷெரின் ஆகிய ஐந்து பேர் தான் இப்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்கள்.
இவர்களில் முகென் கோல்டன் டிக்கெட் வென்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டார். இதனால் மீதியிருக்கும் நான்கு பேரில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பிக் பாஸ் ரசிகர்களிடம் தொற்றிக் கொண்டுள்ளது. முகெனுடன் சேர்த்து பைனலுக்கு போகும் அந்த நான்கு போட்டியாளர்கள் யார் எனும் பேச்சு தான் ஊரெங்கும் கேட்கிறது.

வெளியேறிய ஷெரின்
சாண்டி, தர்ஷன், லாஸ்லியா, ஷெரின் இடையே கடுமையான போட்டி நலவியது. இதில் ஷெரின் குறைந்த வாக்குகள் பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டைட்டில் வின்னராக வேண்டும் என்ற ஷெரினின் ஆசை தவிடுபோடியாகியுள்ளது.

இறுதிச்சுற்று
பிக் பாஸ் வீட்டில் இருந்து ஷெரின் வெளியேறி இருப்பதால், முகென், தர்ஷன், லாஸ்லியா, சாண்டி ஆகிய நான்கு பேர் தான் பைனலுக்குள் நுழைந்திருக்கிறார்கள். இவர்களில் யார் டைட்டில் வின்னர் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தானாக வெளியேறிய கவின்
இதனிடையே பிக் பாஸ் போட்டியில் இருந்து தாமாகவே வெளியேறிவிட்டார் கவின். பிக் பாஸ் கொடுத்த டீலின் படி ரூ.5 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு அமைதியாக அவர் வெளியேறினார். அதனால் கவின் தான் டைட்டில் வின்னர் என சமூக வலைதளங்களில் ஆர்ப்பரித்து வந்த அவரது ஆர்மியினர் ஏமாற்றம் அடைந்தனர்.

சர்ச்சைகளில் சிக்காதவர்
தற்போது ஷெரின் வெளியேறியிருப்பதால் அவரது ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஷெரினை பொறுத்த வரை எந்த சர்ச்சைக்குள்ளும் சிக்காமலேயே விளையாடி வந்தார். இதனால் முதல் 10 வாரங்கள் அவர் நாமினேட் செய்யப்படவே இல்லை. எல்லோருடனும் பிரெண்ஷிப்பாக பழகியவர் ஷெரின் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











