For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான்சென்ஸ்.. லாஸ்லியாவிடம் கடலை போட்ட கவின்.. பொறுத்தது போதும் பொங்கி எழுந்த ஷெரின்.. ஒரே உதை தான்!

    |
    Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 88 : Ticket to finale : வெளிவந்த ஷெரின் உண்மை முகம்

    சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் - சாண்டி இடையே காலையில் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து, தற்போது ஷெரின் - கவின் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    டிக்கெட் டு பினாலே டாஸ்க் பிக் பாஸ் வீட்டையே களேபரமாக மாற்றியுள்ளது. முன்னர் ஒன்றுக்கும் உதவாத காரணத்துக்காக சண்டை போட்டுக்கொண்ட ஹவுஸ்மேட்ஸ், தற்போது தான் தங்களின் வெற்றிக்காக போராட ஆரம்பித்திருக்கிறார்கள்.

    பிசிக்கல் டாஸ்க்குகள் அதிகளவில் தரப்படுவதால், இத்தனை நாட்கள் சோம்பேறித்தனமாக வீட்டில் அரட்டை அடித்துக் கொண்டிருந்த போட்டியாளர்கள், சுறுசுறுப்பாக ஓடத் தொடங்கியிருக்கிறார்கள்.

    நேற்றைய மோதல்

    நேற்றைய மோதல்

    கடந்த மூன்று நாட்களாக விதவிதமான பிசிக்கல் டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. நேற்றைய தினம் காலையில், முதுகில் தெர்மாகோல் பந்து மூட்டையை தூக்கிக் கொண்டு ஒரு வட்டத்தில் ஹவுஸ்மேட்ஸை ரவுண்டு அடிக்க விட்டார் பிக் பாஸ். அப்போது கவினுக்கும், தர்ஷனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    மீண்டும் சண்டை

    மீண்டும் சண்டை

    இன்று காலை வெளியான முதல் புரொமோவில், ஒரு டாஸ்க்கில் ஆக்ரோஷமாக விளையாடுகிறார் சாண்டி. அதனால் லாஸ்லியா கீழே விழுகிறார். அதை பார்த்து கோபமடையும் கவின், சாண்டியை திட்டுகிறார். இதனால் இன்றும் பிக் பாஸ் வீட்டில் ஏதோ பிரச்சினை இருக்கும் என தெரிந்தது.

    ஷெரின் கோபம்

    ஷெரின் கோபம்

    இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது புரொமோவில், கவின் - ஷெரின் இடையே பிரச்சினை வெடித்துள்ளது. டாஸ்க்கின் நடுவே லாஸ்லியாவிடம் நலம் விசாரிக்கிறார் கவின். இதனால் கடுப்பாகும் ஷெரின், பந்து நிரம்பியிருந்த கூடையை எட்டி உதைத்துவிட்டு கோபமாக கவினை திட்டுகிறார். பின்னர் கோவித்துக்கொண்டு உள்ளே சென்றுவிடுவார்.

    கவின் எதிர்ப்பு

    கவின் எதிர்ப்பு

    ஷெரினின் இந்த செயலுக்கு கவினும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். "நீங்க எல்லாம் கேமை ரொம்ப நியாயமாக விளையாடுறீங்களோ?", என கவின் கோபப்படுகிறார். எனவே இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டைகளுக்கு பஞ்சமிருக்காது என்றே தோன்றுகிறது. இல்லை வழக்கம் போல் புரொமோவில் மட்டும் சண்டைகளைக் காட்டி விட்டு, நிகழ்ச்சியை சப்பென முடித்து விடுகிறார்களா எனத் தெரியவில்லை.

    English summary
    Sherin and Kavin exchange hard words in a task, shows second promo of today's episode.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X