சேரன் தப்பிச்சுட்டாரு.. இந்த வார எவிக்சன் பெண் போட்டியாளர்.. நேற்றே பூடகமாக சொன்ன பிக் பாஸ் !
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஷெரீன் தான் எவிக்ட் ஆகிறார்.
சென்னை: இந்த வாரம் சேரன் எவிக்ட் ஆகவில்லை. எவிக்டானது ஒரு பெண் போட்டியாளர் தான் என்பதை நேற்றே பிக் பாஸ் பூடகமாக காட்டி விட்டார்.
இந்த வார நாமினேஷனில் சேரன், கவின், லாஸ்லியா, முகென் மற்றும் ஷெரீன் ஆகியோரது பெயர்கள் உள்ளன. இவர்களில் ஆரம்பம் முதலே குறைந்த வாக்குகளுடன் கடைசி இடத்தில் இருந்தவர் ஷெரீன் தான். ஆனால், சாக்ஷியின் வருகை, வனிதாவுடனான சண்டை போன்றவற்றால் இந்த நிலை மாறியது.
இந்த பிரச்சினைகளால் மக்கள் ஆதரவு ஷெரீனுக்கு அதிகமானது. ஷெரீன் அதிக வாக்குகள் பெற்று மேலே செல்ல, சேரன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டார்.

சேரன் எவிக்டா?
எனவே, இந்த வாரம் சேரன் தான் எவிக்ட் ஆகிறார், அவர் சீக்ரெட் ரூமுக்குச் சென்றுள்ளார் என ஏகப்பட்ட தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன. ஆனால், இவை அனைத்தும் உண்மையில்லை என்பது நேற்றைய எபிசோட்டை ஆழ்ந்து பார்த்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

கமல் ஷூட்டிங்
எப்போதுமே சனிக்கிழமைகளிலேயே ஞாயிற்றுக்கிழமைக்கான எபிசோடும் எடுக்கப்பட்டு விடுவது வழக்கம். எனவே, பார்வையாளர்கள் யாரும் மாறுவதில்லை. போட்டியாளர்களும், கமலும் மட்டுமே ஆடையை மாற்றிக் கொண்டு வந்து, ஞாயிற்றுக்கிழமைக்கான எபிசோட்களை படமாக்கி விடுகின்றனர்.
View this post on InstagramA post shared by Sherin Shringar (@sherinshringar) on
ஷெரீன் அம்மா
அந்தவகையில் வெளியேறப் போகும் போட்டியாளரின் உறவினர்கள் இதில் கலந்து கொள்வது வழக்கம். அப்படி நேற்று காட்டப்பட்ட காட்சிகளில் ஷெரீனின் அம்மா தான் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்தார். அடிக்கடி அவரை குளோசப்பில் காட்டினார்கள்.

சேரனுக்கு ஆதரவு
இதை வைத்து பார்க்கும் போது இந்த வாரம் வெளியேறப் போவது ஷெரீன் தான் என்பது உறுதியாகியுள்ளது. ஆரம்பம் முதலே பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரனுக்கு அசைக்க முடியாத ஆதரவு உள்ளது. அவர் டைட்டிலை பெறுவதற்குக்கூட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. டைட்டில் தரப்படாவிட்டாலும் கூட, நிச்சயம் ரன்னர் அப் கிடைக்கும்.

பிக் பாஸின் தந்திரம்
எனவே அவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்புகள் இல்லை. அதோடு, இந்த சீசனில் ஆரம்பம் முதலே ஒரு விஷயத்தை நன்கு கவனித்து பார்த்தால் தெரியும். அதாவது பிக் பாஸ் வீட்டில் எப்படி நடந்து கொண்டாலும் சரி, ஆனால் வீட்டை விட்டு வெளியேறும் போது அவர்கள் மீதான இமேஜை அப்படியே பிக் பாஸ் மாற்றி விடுவார்.

வனிதா விவகாரம்
இது ஏற்கனவே வனிதா, சாக்ஷி, அபிராமி என பலரது விசயங்களில் நாம் கண்கூடாகப் பார்த்தது தான். இந்த வாரம்கூட மக்களை நாய் எனத் திட்டியதால் சர்ச்சையில் சிக்கினார் சாக்ஷி. ஆனால் அவரை லாவகமாக பிரச்சினையில் இருந்து நேற்று காப்பாற்றி விட்டார் கமல்.

வெயிட் அண்ட் ஸீ
அந்தவகையில் இந்த வாரம் ஷெரீனைப் பற்றித் தான் அதிகம் பேசியுள்ளனர். எனவே, ஷெரீன் தான் இந்த வாரம் வெளியேற்றப் பட்டிருக்க வேண்டும். இன்றைய எபிசோட்டில் நமது கணிப்பு சரியா தவறா என்பது தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications











