"உம்மா உம்மம்மா".. ஷெரினை திரும்ப திரும்ப முத்தம் கொடுக்க வைத்த பிக் பாஸ்.. குருநாதா இதெல்லாம் ஓவர்!
நடிகை ஷெரினை பிக் பாஸ் திரும்ப திரும்ப முத்தம் கொடுக்க வைத்த வீடியோ வைரலாகியுள்ளது.
Recommended Video
சென்னை: லூப் டாஸ்கில் நடிகை ஷெரினை பிக் பாஸ் திரும்ப திரும்ப முத்தம் கொடுக்க வைத்த வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ப்ரீஸ் மற்றும் லூப் டாஸ்க் நடைபெற்று வருகிறது. போட்டியாளர்கள் எதிர்பார்க்காத சமயத்தில் அனைவரையும் ப்ரீஸ் செய்ய சொல்வார் பிக் பாஸ். இதையடுத்து எல்லோரும் சிலை போல் அசையாமல் நிற்க வேண்டும். அந்த சமயத்தில் யாராவது ஒருவரை ரிலீஸ் செய்து மற்றவர்களை வம்பிழுக்க வைப்பார்.
அதேபோல் லூப் டாஸ்க்கும் கொடுக்கப்படும். எந்த போட்டியாளராவது வித்தியாசமாக ஏதாவது செய்யும் போது அதனை திரும்பத் திரும்ப செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும். அதைக் கேட்டு அவர்கள் அந்த செயலை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

ஐஸ்வர்யா, யாஷிகா
இந்த ப்ரீஸ் மற்றும் லூப் டாஸ்க், ஆடியன்சை வெகுவாக கவர்ந்த விஷயம். கடந்த இரண்டு சீசன்களிலும் இந்த டாஸ்க்கில் நிறைய போட்டியாளர்கள் மாட்டியிருக்கிறார்கள். கடந்த சீசனில் ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் இந்த டாஸ்க்கில் பலமுறை மாட்டினார்கள்.

லூப் டாஸ்க்
ஆனால் இந்த சீசனில் யாருக்கும் அவ்வளவாக லூப் டாஸ்க் கொடுக்கப்பட்டது எபிசோடில் காட்டப்படவில்லை. இந்த சீசன் முழுவதுமே மைண்ட் கேம் போல தான் எமோஷனலாக போய்க்கொண்டிருக்கிறது. அதுகுறித்து காட்சிகளை ஒளிப்பரப்புவதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக உள்ளது.

வைரலாகும் வீடியோ
இதனால் லூப் டாஸ்க் கொடுக்கப்படும் காட்சிகளை டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டப்படுவதில்லை. இணையதள பிளாட்பாரங்களில் தான் அவை பதிவிடப்படுகின்றன. அப்படி ஒரு அன்சீன் வீடியோ தான் தற்போது வைரலாகியுள்ளது.

முத்தம் கொடுத்தப்படியே...
அந்த வீடியோவில் ஷெரின் தலை சீவிக்கொண்டே கேமராவை பார்த்து விளையாட்டாக முத்தம் கொடுக்கிறார். இதை கவனித்த பிக் பாஸ் ஷெரினுக்கு லூப் டாஸ்க் கொடுக்கிறார். இதையடுத்து அவர் கேமராவுக்கு வாய் வலிக்கும் அளவிற்கு முத்தம் கொடுத்தப்படியே இருக்கிறார்.

ஓவர் பிக்கி
ஒருகட்டத்தில் பொறுமையிழந்த ஷெரின், 'அட போங்க பிக்கி' எனக் கூறி கிளம்பிவிடுகிறார். பிக் பாஸை ஷெரின் பிக்கி என்று தான் செல்லமாக கூப்பிடுவார் என்பது நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த லூப் டாஸ்க்கை படுத்தப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறார் வனிதா.
சிரித்தே செத்துடுவோம்
கேமராவுக்கு முத்தம் கொடுத்தப்படி இருக்கும் இந்த வீடியோ செம காமெடியாக உள்ளது. அதில் ஷெரினின் ரியாக்ஷனை பார்த்தால் சிரித்தே செத்து விடுவோம். தன்னுடைய நிலையை நினைத்து நடுவில் அவருக்கே சிரிப்பு வந்துவிடுகிறது.

செம ஃபார்மில் பிக் பாஸ்
இந்த வாரம் முழுவதுமே பிக் பாஸ் செம ஃபார்மில் தான் இருக்கிறார். சாண்டியை அடிக்கடி அழைத்து மைக்கை ஒழுங்காக மாட்டச் சொல்லி கலாய்கிறார். அதுபோல் ஷெரினையும் கலாய்த்து மாஸ் கொடுத்திருக்கிறார். ஆனால் இப்படி ஒரு விஷயத்தை போய் எடிட் செய்து விட்டீர்களே பிக் பாஸ் என ரசிகர்கள் புலம்புகிறார்கள்.


Click it and Unblock the Notifications











