twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘டிக்கெட் டு பினாலே’.. முதன்முறையாக உருப்படியான டாஸ்க்குகள் தந்த பிக் பாஸ்.. மாஸ் காட்டும் லாஸ்!

    டிக்கெட் டு பினாலேவுக்காக போட்டியாளர்களுக்கு கடினமான டாஸ்க் கொடுக்க ஆரம்பித்து விட்டார் பிக் பாஸ்.

    |

    Recommended Video

    Bigg Boss 3 Tamil | Promo 1 | Day 85 |Ticket to finale task

    சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டு பினாலேவிற்கான டாஸ்க்குகள் நடைபெறுகின்றன.

    பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. நேற்று வனிதா வெளியேறி விட்டார். தற்போது பிக் பாஸ் வீட்டில் சேரன், கவின், தர்ஷன், சாண்டி, முகென், லாஸ்லியா மற்றும் ஷெரின் என மொத்தம் ஏழு போட்டியாளர்கள் உள்ளனர்.

    இறுதிகட்டத்தை நெருங்குவதால் இனி வரும் நாட்களில் போட்டியாளர்களிடையே போட்டி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிக்பாஸ் காதலை விட சுபஸ்ரீ மரணம் பற்றி சிந்திங்க... பேனர் வைக்காதீங்க - நடிகர் ஆரிபிக்பாஸ் காதலை விட சுபஸ்ரீ மரணம் பற்றி சிந்திங்க... பேனர் வைக்காதீங்க - நடிகர் ஆரி

    டிக்கெட் டு பினாலே

    டிக்கெட் டு பினாலே

    அதனை உறுதி செய்வது போல், நேரடியாக இறுதி வாரத்திற்கு செல்வதற்கான டிக்கெட் டு பினாலேவுக்கான டாஸ்க் இந்த வாரம் நடைபெறுகிறது. இதில் போட்டியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் காட்சிகள் இன்றைய முதல் புரொமோவில் இடம் பெற்றுள்ளது. சேரன், ‘எனக்குத்தான் வேணும்' எனக் கூறும் காட்சிகளும் அதில் உள்ளன.

    ரசிகர்கள் மகிழ்ச்சி

    ரசிகர்கள் மகிழ்ச்சி

    முதல் நாளிலேயே கயிறு கட்டி இழுத்தல், காலில் பலூன் கட்டிக் கொண்டு உடைத்தல் என விதவிதமான டாஸ்க்குகளாக கொடுத்து அசத்தியுள்ளார் பிக் பாஸ். இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்தே சரியான பிசிகல் டாஸ்க் கொடுக்கவில்லை என்ற ரசிகர்களின் மனக்குமுறலை சரி செய்யும் வகையில் இந்த டாஸ்க்குகள் அமைந்துள்ளன.

    மாஸ் காட்டும் லாஸ்

    மாஸ் காட்டும் லாஸ்

    போட்டியாளர்களும் இதற்குத்தான் இத்தனை நாளாகக் காத்திருந்தோம் என வெறி கொண்டு இந்த டாஸ்க்கில் விளையாடுகின்றனர். லாஸ்லியா விளையாடுவதைப் பார்த்து அவரது ரசிகர்கள், மாஸ் எனப் பாராட்டி வருகின்றனர். சேரன் தான் இந்த டாஸ்க்குகளை எப்படி சமாளிக்கப் போகிறார் எனத் தெரியவில்லை.

    கோள் மூட்டிய பிக் பாஸ்

    கோள் மூட்டிய பிக் பாஸ்

    அதோடு போட்டியாளர்கள் தங்களுக்குள் ஒரு தரவரிசைப் பட்டியலை உருவாக்கியுள்ளனர். அதன்படி போட்டியாளர்கள் மேடையில் நிற்கும் டாஸ்க்கும் இன்று உள்ளது. இதன்மூலம் நிச்சயம் போட்டியாளர்களுக்குள் சண்டை வரும் என எதிர்பார்க்கலாம். குறிப்பாக இதில் லாஸ்லியா, கவின் மற்றும் சேரன் இடையே தான் மனக்கசப்பு வரும் எனத் தெரிகிறது.

    English summary
    This week in bigg boss tamil 3 the ticket to grand finale task have given for the contestants, shows the first promo of today's episode.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X